பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166



உரவோன் – வலிமை மிக்க பரசுராமன்; (இராமனை நோக்கி) இற்று – ஓடிய உனது கைகளால் ஒடிக்கப் பெற்ற சிலையின் திறம்—சிவதனுசின் தன்மையை; அறிவேன்—நான் அறிவேன்: (அது முன்னரே பழுதுபட்டது) இனி–இப்போது; உன் பொன் தோள்—உனது அழகிய தோள்களின்; வலி நிலை—திறமையை; சோதனை புரிவான் பரிசோதித்துப் பார்க்கும்; நசை உடையேன் – ஆசை உடையேன், சென்று ஓடிய—அரசர் பலரை வென்று நிமிர்ந்த; திரள்தோள் உறுதினவும்—திரண்ட தோள்களிலே போர் செய்யும் தினவும்; சிறிது உடையேன் : இங்கு என் வரவு இது—இங்கு நான் வந்தது இதன் பொருட்டே; மற்று ஓர் பொருள் இலை–வேறு ஒன்றும் இல்லை.

xxxx


ரு கால் வரு கதிராம் என
        ஒளி கால்வன உலையா
வருகார் தவழ் வடமேருவின்
        வலி சால்வன மனனால்
அருகா வினை புரிவான் ஊன்
        அவனால் அமைவன வாம்
இரு கார் முகம் உளயாவையும்
        ஏலாதன மேனாள்

சூரியனைப் போல் ஒளி வீசுவனவும், மேருவைப் போல வலிமை பொருந்தியனவும் ஆகிய விற்கள் இரண்டை அந்த நாளிலே மயன் சிருஷ்டி செய்தான்.

xxxx

ஒருகால் வருகதிர் ஆம் என—ஒரு சக்கரத் தேரில் உலகைச் சுற்றி வரும் கதிரவனைப் போல; ஒளி கால்வன–ஒளி வீசுவனவும்; வருகார் தவழ் வடமேருவின்—மிக்க