பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

என்னாவது? எனவே தூதுக்கு இப்போது இடமேயில்லை!” என்றான் தீர்மானமாக.

தம்பி சொன்னதைக் கேட்டு புன்முறுவல் பூத்தான் இராமன். போர் தொடுப்பதில் எவ்வித அவசரமும் கூடாது என திட்டவட்டமாக காட்டியுள்ள அரச நீதியைச் சுட்டிக் காட்டினான்.

“பொறுமையை கடைபிடிப்போம்.நம் சமாதான முயற்சி எதுவும் பலனளிக்கா விட்டால் கடைசி பட்சமாகப் போருக்கு எழுவோம்.”

பின்னர் யாரை தூது அனுப்புவதென்றும் கூறினான் இராகவன். “முன்னம் ஒருமுறை சீதையைத் தேடுவதற்காக அநுமனை அனுப்பினோம். அவனையே மீண்டும் அனுப்பினால், நம் பக்கம் வேறு வீரரில்லையோ என்று தவறாக பகைவர் எடை போடக்கூடும். எனவே அநுமனைப் போல் மிகப் பெரிய வீரர் பலர் நம்மிடம் உண்டு என்று பகைவர் அறியும்படி இம்முறை அங்கதனை தூது அனுப்புவோம். தீமைகள் சூழ்ந்தாலும் வெற்றியுடன் திரும்பும் ஆற்றலுடையவன் அவன்!” என்று கூறினான் இரகுவீரன். விபீடணனும் சுக்ரீவனும் இதனை ஏற்றனர்.

***

நெடுந்தகை விடுத்த தூதன்
         இனையன நிரம்ப எண்ணிக்
கடுங்கனல் விடமும் கூற்றும்
         கலந்து கால் கரமும் காட்டி
விடும் சுடர் மகுடம் மின்ன,
        விரிகடல் இருந்தது அன்னக்
கொடுந்தொழில் மடங்கல் அன்னான்
        எதிர் சென்று குறுகி நின்றான்.