பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

263

அங்கவர் தன்மை நிற்க
       மனிசனுக்காக அஞ்சாது,
இங்கு வந்து இதனைச் சொன்ன
       தூதன் நீ யாவன்?’என்றான்.

“கங்கையையும், பிறைச் சந்திரனையும் முடியிலே சூடியுள்ள நெற்றிக்கண்ணனாகிய சிவனும் சரி, சங்கு சக்கரம் தரித்த திருமாலும் சரி, இந்த இலங்கை மாநகர் வாரார்;பயப்படுவர். அவர்களே அப்படி யிருக்கக் கேவலம் இந்த மனிதனுக்காக அஞ்சாது தூது வந்த நீ யார் சொல்!” என்று கேட்டான் இராவணன்.

***

கங்கையும் - கங்கா நதியையும்; பிறையும் - பிறைச் சந்திரனையும்; சூடும் - தன் முடிமீது அணிந்துள்ள ; கண் நுதல் - நெற்றியிலே கண் உடைய சிவனும்; கரத்து - கைகளிலே; நேமி, சங்கமும் - சக்கரமும், சங்கமும்;தரித்த -ஏந்திய,மால்-திருமாலும்; இந்நகர் தன்னைச் சாரார் - இந்த இலங்காபுரிக்கு வரமாட்டார்; அங்கவர் நிலைமை நிற்க - அவர்களது நிலைமையே அவ்விதம் இருக்க; மனிசனுக்கா - கேவலம் ஒரு மனிதன் பொருட்டு;அஞ்சாது-பயமின்றி; இங்கு வந்து - இந்த இலங்கை மாநகரை அடுத்து; இதனைச் சொன்ன - இவ்வார்த்தைச் சொன்ன; தூதன்-தூதினன்; நீ யாவன் - நீ யார்? என்றான் - என்று கேட்டான் இராவணன்.

***

தூதுவனைப் பார்த்து இராவணன் ‘நீ யார்?’ என்று கேட்கிறான்.

அப்போது அங்கதன் முதலில் தன் சிற்றப்பன் சுக்ரீவனை புகழ்கிறான். தன் தந்தை வாலியின பராக்கிரமத்தையும், இராவணனை அவன் என்ன செய்தான் என்பது பற்றியும் நகைக்கும் வண்ணம் கூறுகிறான்.