பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63



8. அரசியற் படலம்

சுக்ரீவனுக்கு முடிசூட்டுகிறான் இராமன். அவன் எவ்வாறு நல் அரசு செலுத்த வேண்டுமென்பதையும் இராமன் எடுத்துரைக்கிறான். நான்கு திங்களுக்குப் பின் கிட்கிந்தையிலிருந்து படையுடன் வருமாறு பணிக்கிறான் இராமன். இராமனின் வற்புறுத்தலுக்கிணங்கி அநுமன் கிட்கிந்தை செல்கிறான். இராமனும் இளையவனும் வேறோர் மலையை அடைகின்றனர்.

9. கார்காலப் படலம்

கார் காலம் வருகிறது. இயற்கை எழில் பொங்குகிறது இராமனின் விரகதாபத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார் கம்பநாடன். அண்ணனை தேற்றுகிறான் தம்பி.

10. கிட்கிந்தைப் படலம்

சொல்லியபடி சுக்ரீவன் பட்டையுடன் வரவில்லை. கோபத்துடன் செல்கிறான் லட்சுமணன் கிட்கிந்தைக்கு. லட்சுமணனின் சீற்றத்தைத் தணிக்கிறாள் தாரை. மாருதியும் அங்கதனும் சுக்ரீவனிடம் லட்சுமணனின் வருகையைத் தெரிவித்து சுக்ரீவனின் தவற்றை உணரச் செய்கின்றனர். சுக்ரீவன் இராமனிடம் செல்கிறான். மன்னிப்பு கோருகிறான்.

11. தானை காண் படலம்

வானரப் படைகளைப் பற்றியும், தானைத் தலைவர்கள் பற்றியும் கூறும் படலம் இது.

12. நாட விட்ட படலம்

இனி நடக்க வேண்டுவனப் பற்றிச் சிந்தித்து முடிவு எடுக்கும் இராமனைப் பற்றி கூறுகிறது இப்படலம். சுக்ரீவன் அநுமன் அங்கதன் ஆகியோர் தென்திசை போகின்றனர் ஒரு மாத காலத்திற்குள் தேடித் திரும்புக என காலவரையறுக்கிறான் சுக்ரீவன். இராமன் அநுமனுக்குச் சீதையின் அங்க அடையாளங்களைக் கூறி, சில அந்தரங்க செய்திகளை-