பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, இந்திய அறிஞர் வரலாறு-நாட்டு வரலாறு, உலக நாடுகளின் வரலாறு ஆகியவை இடம் பெறும்.

4-1. தமிழர் வரலாறு:

‘தமிழ்ச் சாதி என்னும் தலைப்பில், இறுதியில் கிடைக்காத பகுதி போக, கிடைத்துள்ள 123 அடிகள் கொண்ட நீளப் பாடலில் தமிழர் நிலை பாரதியாரால் சுருங்கத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. பிற நாடுகளில் அடிமையாய் விலங்குபோல் உழைக்கும் தமிழ் மக்களின் நிலையைப் படிப்போர் இரங்கும் வண்ணம் பாரதியார் எடுத்துரைத்துள்ளார்.

4-2. தமிழ் நாட்டு வரலாறு:

“செந்தமிழ் நாடு” என்னும் தலைப்புள்ள “செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்னும் பாடலில் தமிழ் நாட்டு வரலாறு சுருங்கத் தரப்பெற்றுள்ளது. இதில், தமிழ் நாட்டுக் கல்வி, மெய்யறிவு (தத்துவம்), இயற்கை வளம், வெளி நாட்டுப் படையெடுப்பு வெற்றி, அயல் நாட்டு வாணிகம் முதலியன இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டு வரலாறு என்பதில், தமிழர் வரலாறும் தமிழ் மன்னரின் வரலாறும் அடங்கும் அன்றோ?

4-3. இந்திய அறிஞர் வரலாறு:

காந்தி யண்ணல், சிவாஜி, கோக்கலே சாமியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, குரு கோவிந்தர், தாதாபாய் நவுரோசி, பூபேந்திரர், திலகர், லாச பதி, குள்ளச் சாமி, யாழ்ப்பாணச் சாமி, கோவிந்த சாமி, குவளைக்கண்ணன், தாயுமானவர், நிவேதிதா, அபேதாநந்தா, இரவிவர்மா,