பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


இவ்வாறு அணி நயங் காணும் இடங்களிலும் பிற இடங்களிலும் சயங்கொண்டாரின் கற்பனைத் திறத்தினைக் காணலாம். இக் கற்பனைத் திறன், பாடிய புலவர் உணர்ந்த அனுபவத்தை நாமும் உணரத் துணை செய்கிறது. சயங்கொண்டாரின் பரணிக்காப்பியத்தில் இத்தகைய கற்பனை நயங்கள் அமைந்து அது இன்றும் ஒரு 'கற்பனை ஊற்றாக’ தம்மிடையே நின்று நிலவுகிறது.