பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன்

135


யில் நீங்கியது. சத்த்சவர்மன் கி. பி. 1063-ல் இறந்த பின்னர் விசயாதித்தன் தன் தமையன் மகனாகிய குலோத்துங்கமீது அன்பு காட்டினான். குலோத்துங்கனும் தன் சிறிய தந்தை உயிர்வாழுமளவும் வேங்கி நாட்டை ஆளட்டும் என்று அமைதியுடன் இருந்துவிட்டான். சிறிய தந்தை இறந்த பின்னர் வேங்கி நாட்டை ஆளலாம் என்ற எண்ணம் மட்டிலும் அவனிடம் இருந்தது என்பது ஒருதலை.

விசயாதித்தன் வேங்கி நாட்டை ஆண்டு கொண்டிருந்தபொழுதுகுலோத்துங்கன் சோழநாட்டில் தன் மாமன் வீட்டில் வாழ்ந்து வந்தான். அப்பொழுது சோழநாட்டை ஆண்டவன் வீரராசேந்திரன், வீரராசேந்திரன் மேலைச் சளுக்கியர்களுடன் நடத்தியபோர்களில் குலோத்துங்கன் கலந்து கொண்டு தன் அம்மானுக்கு உதவி புரிந்தான் என்பது சில நிகழ்ச்சிகளால் அறியக்கிடக்கின்றது. வீரராசேந்திரன் வேங்கி நாட்டிலுள்ள விசயவாடையில் மேலைச் சளுக்கியருடன் போரிட்டு வெற்றி பெற்று, தன்னிடம் அடைக்கலம் புகுந்த விசயாதித்தனுக்கு அந்நாட்டை அளித்த காலத்தில் குலோத்துங்கனும் அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும்.[1] அன்றியும், வீரராசேந்திரன் கடாரத்தரசனுக்கு உதவி புரிவான் வேண்டி பெரும் படை ஒன்று அனுப்பியபொழுது கடாரத்திற்குச் சென்ற தலைவர்களுள் குலோத்துங்கனும்


  1. K. A. Nilakanta Sastri: The Colas (Second Edition) pp. 261-2