பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கலிங்க ஆரத்தழுவலே முறை என்று ஆன்றோர் கூறினர். வீர மணியின் தாய் மட்டுமே பரத்தையரிலேதானா என் பாலனுக்குப் பாவை கிடைத்தாள்? குன்றெடுக்கும் தோளான் என் மகன்; குறுநில மன்னன் மகள் அவனுக்குக் கிடைக்காளோ! என்று கவலையுற்றாள். ஆனால், வீர மணி, நடனராணியிடம் கண்ட கவர்ச்சியை அவனன்றோ அறிவான்! இருண்டு சுருண்ட கூந்தல், பிறைநுதல், சிலைப்புரு வம், நெஞ்சைச் சூறையாடும் சுழற் கண்கள், அரும்பு போன்ற இதழ், முத்துப் பற்கள், பிடியிடை இவை கண்டு, கரும்பு ரசமெனும் அவள் மொழிச்சுவை உண்டு, கண்படைத் தோருக்குக் காட்சியென விளங்கும் நடன நேர்த்தியைக் கண்டு, மையல் கொண்ட வீரமணி நடனராணியிடம் நெருங் கிப் பழகியதும் சீரிய குணத்தின் பெட்டகமாகவும் இருப் பதையும், கருத்து ஒருமித்திருப்பதையும் கண்டு, களி கொண்டு, 'அவளையன்றிப் பிறிதோர் மாதைக் கன விலுங் கருதேன் என்று கூறிவிட்டான். மணவினையை முடித்துக் கொள்ளாததற்குக் காரணம், தாய் காட்டிய தயக்கமல்ல! தாய் தனயனுக்குக் குறுநில மன்னனின் மகள் தேடிட எண்ணினாள், தனயனோ, கோமளவல்லிக்கு மணவினைப் பரிசாக வழங்க குறுநிலம் தேடினான். அதற் காகக் கொற்றவனிடம் தான் கற்ற வித்தையத்தனையும் காட்டிச் சேவை புரிந்துவந்தான் . நடனராணியின் வாழ்க்கை நல்வழியிலே அமைய இருப்பது கண்டு, களித்து, பதுமா நிம்மதியாகவே நீங்காத் துயிலுற்றாள். பூங்காவிலே நடனராணி புதிதாகச் சேடியாக அமர்ந்த ஓர் ஆரியக் கன்னியிடம், தமிழர் சிறப்புப் பற்றி எடுத்துக் கூறிக்கொண்டிருந்தாள். கங்கைக் கரையிலே தனது இனத் தவர் கனல்மூட்ட ஓமத்தீ மூட்டுவதை ஆரியக்கன்னி உரைத் திட, நடனமணி எம்மவரின் ஓமம் எதிரியின் படை வீட் டைக் கொளுத்துகையில் கிளம்பும் என்றுரைத்து மகிழ்ந் தாள்.