பக்கம்:கலிங்க ராணி, அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இக் கலைக் கூறுகள் அதன் இலக்கியச் சிறப்பிற்குச் சான்று பகரும் பாங்கின. ஏட்டளவில் எத்தனையோ ஏற்றம் பெற்றிருந்த இந்நாட்டினர் அழிவைத் தரும் ஆரிய ம யை பில் புரண்டு தனித்தன்மை வாய்ந்த திராவிடப் பண்பாட்டை மறந் தனர்; துறந்தனர், ஆரியம் பண்பாட்டு அழிவை மட்டு மின்றி பகுத்தறிவு வளர்ச்சியையும் தடை செய்தது என் பதை எவறேனும் மறுக்க முடியுமோ? இருப்பினும் உள்ள உறுதியே - எதிர்ப்புக் குரல் எழுப்பியது ஈரோட்டுப் பாசறை பில் அன்றோ ! பாசறையின் தளபதியாய்த் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா , தமிழகத்திற்கு ஆரியம் புதிய தார் ஆ'பத்தை உருவாக்கிய வரலாற்றை உணர வைக்கும் பொறுப்பை ஏற்றார். அழிவு தரும் ஆரியம் தமிழ் மக்களை இழிவு படுத்தும் இயல்பு புராண இதிகாசங் களுக்குக் கருவாய் அமைந்தன. இதனை எதிர்த்துப் புதியதோர் உலகிற்கு வழிகாட்டும் நெறிகளைத் தரும் இலக்கியம் படைப்பதில் முனைவு கொண்டார் அறிஞர் அண்ணா . அம்முனைப்பின் இலக்கிய வடிவமே கலிங்கராணி. கதை நிகழ்ச்சிகள்: கன்னடர், பல்லவர், கைதவர், காடவர், கோசலர், கங்கர், கராளர், கடம்பர், குறும்பர், வங்கர், மராடர், விராடர், கொங்கணர் முதலிய பல்வேறு வட்டார மன் னர்கள் பொன்னும் மணியும் வேழமும் புரவியும் ஆரமும் பிறவுமாகத் திறை செலுத்த இறையே ாச்சிய பெருமை குலோத்துங்க சோழனுக்கு உண்டு. அக் குலோத்துங்க சோழ மன்னன் காலத்திலே ஆரிய நச்சரவு வளர்க்கும் இராம கதையும் உலவிற்று. அன்றே ஆரியத்திற்கு ஓர் எதிர்ப்பு வலுத்திருந்தால் தமிழகத்தின் வரலாறே மாறி யிருக்குமன்றோ! அன்றிருந்தோர் அதை எண்ணினரோ, இல்லையோ! இன்று நமக்கு அவ்வுணர்ச்சியைப் புகட்ட ஒரு கதையை அச்சூழலில் தந்தார் அண்ணா . புறப்பகை வர்களிடம் விழிப்பாய் இருந்த சோழ மன்னர்கள் அகப் யோ! அச்சூழலில் இருந்த