பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

காஞ்சி வாழ்க்கை


தமிழ்த்துறையில் வல்லவர்களாய் எனக்கு வழிகாட்டிகளாய் நிற்க அங்கே யாரும் இல்லையேனும் நானே பல நூல்களை வாங்கி வைத்துக்கொண்டு மெல்லமெல்லச் சில ஆண்டுகள் படித்துக்கொண்டே வந்தேன். ஓராண்டு பள்ளியில் பணி செய்த பிறகு வீட்டிலேயே தங்கி, அதிகமாகப் பயில வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். அங்கங்கே நடக்கும் அறிஞர்கள் கூட்டங்களுக்குச் சென்று கலந்துகொண்டு அறிவுரைகளைப் பெற்று வருவேன்.

ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கழிந்தாலும் என் இல்வாழ்வில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. மணம் நடைபெற்று ஐந்தாறு ஆண்டுகள் கழிந்தபோதிலும் ஒருதரமாவது ஐந்தாறு நாட்கள் சேர நாங்கள் வாழ்ந்ததில்லை. எனவே எனது பெற்றேரும் மற்றோரும் என்னை மறுமணம் செய்துகொள்ளுமாறு தூண்டினர். சில பெண்களைப் பெற்றோரும் தாமே வலியவந்து பெண் கொடுக்கவும் முன் வந்தனர். எனக்கும் பெரிய சங்கடமாகிவிட்டது. என் அன்னையோ நாள்தோறும் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தனர். தந்தையார் ஏக, பாட்டியும் அகல, நானும் சுற்றிக்கொண்டிருக்க அவர்கள்தான் எத்தனை நாட்கள்எத்தனை ஆண்டுகள் தனியாக வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பக்கத்து வீட்டிலேயே பெரியப்பாவும் பெரியம்மாவும் இருந்தபோதிலும் அவர்களும் தனியாக இருந்தமையின் இரண்டு வீடுமே களையற்றிருந்தன. எனவே வீட்டில் 'நடமாடும் இலக்குமி'யாக மருமகள் வரவேண்டும் என அவர்கள் விழைந்ததில் தவறு இல்லையே. அந்த எண்ணத்திலேதான் என் இளவயதையும் கருதாது அப்போதே எனக்குத் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அதுவோ பயனற்றுக் கழிந்துவிட்டது. எனவே அவர்கள் எனக்கு மறுமணம் செய்து வைப்பதில் தீவிரமானர்கள். நான் ஒருமுறை அவர்களோடு வாதாடி மறுத்தேன். அதன் காரணமாக என்னே அவர்கள் வைதார்கள். எனவே எனக்கு உலக வாழ்வே துச்சம் என்கின்ற நிலை உண்டா-