பக்கம்:காதலா கடமையா.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

"எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கு மென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்"

என்ற குறிக்கோளைச் செயல்முறைப் படுத்தி, மக்களை நாட்டு நலனுக்கும் இனத்தின் மாண்புக்கும் விடுதலை எழுச்சிக்கும் அணிஅணியாக அணிவகுத்து நிறுத்திட புரட்சிக் கவிஞர் தீட்டிய அரிய காப்பியம் காதலா? கடமையா? என்பது. 1949இல் பாரதிதாசன் பதிப்பகமே வெளியிட்ட தமிழமிழ்து இது. பெரும்புலவர் சுந்தரசண்முகனார் தீட்டியுள்ள கவின் இலக்கியம்.

தருவதோர் பொருளோ உரிமை?
தருவதோர் பொருளெனில், மீண்டும்

பறிப்பதோர் பருப்பொருள் அதுவே யன்றோ?


எனும் எழுச்சிப் பண்ணிசைத்து நாட்டு விடுதலை — உரிமையை மக்கள் தம் முயற்சியால் பெற்றிட வேண்டும் என்ற மறவுரை வழங்குவது — வழிகாட்டுவது.

புரட்சிக் கவிஞரின் இவ்வெழுச்சி ஏட்டினைத் தமிழ் அமிழ்து சுவைப்போர்க்கு நல்விருந்தாக அளிக்கின்றோம். நூற்றாண்டு நிறைவுப் பரிசாக; ஏற்றுப் போற்றிச் சுவையும் பயனும் பெற்றிட வேண்டுகிறோம்.

டாக்டர் ப. ஆறுமுகம்
பதிப்பாசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/4&oldid=1484258" இலிருந்து மீள்விக்கப்பட்டது