பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சரணம்

வானிறப் புறாவின் வடிவாய்த் தூயாவி
வந்திறங்கித் தேவ மைந்தன் மேற்குலாவி
வானகப்பிதாவும் வாசக மொன்றேவி
வணங்குந் திரியேக திறம் மேவியே {{{1}}}

 

11
ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது.
'ப்ரோவ சமைய' என்ற மெட்டு.
பல்லவி

வனமேவாசம் வானப்ரதேசம்

அனுபல்லவி


அணவுந் தேவேசும் ஆவியுபதேசம்
உணரும் ப்ரகாசம் ஊழியப்ரவேசம் (வ)

சரணம்


உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள்
உலகத்தே வானான் உன்னதன்பாற் போனான்
தின்பொருளிலிச்சை தேவனைப் பரிட்சை
தீயபேயருச்சை தேறி யேசுரட்சை (வ)

 

12
கானாவூர்க் கலியாணம்.
'தாதாபாய் நவரோஜி' என்ற மெட்டு.
பல்லவி

கானாவூர்க் கலியாணம்
கம்பீராதன சம்பாகோதனக் (கா)

சரணம்


காணாது கந்த ரசம்
ஆனாவிருந்து நிசம்
ஆண்டவா அகம் ஈது குறையென
வேண்டினார் மிக ஏசு பரமனை (க)

2