பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ii

 

யால், மேனாட்டிசையே இன்றும் தமிழ்க்கோயில்களிற் பெரும் பான்மை பாடப்பட்டு வருகின்றது.

உலக முழுமையினும் தமிழரே இசையிற் சிறந்தவரென்பது, ஆராய்ச்சியால் நாட்டப்பட்ட உண்மையாகும். தமிழ் தவிர வேறெந்த மொழியினும் இசையானது மொழியுறுப்பாயமைந்திலது. மேனாட்டார்க்கு மெட்டுகள் மட்டுமுண்டு. கீழ்நாட்டார்க்கோ அவற்றொடு எண்ணிறந்தமெட்டுகளை யுள்ளடக்கும் இராகங்களு முண்டு. இவற்றின் விரிவை யெல்லாம் தமிழிசை கரைகண்ட தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க.

இசையானது இன்பம் பெருகப்பெருகக் கமகங்களும், சங்கதிகளும், ஆலாபனையும், தாளவொழுங்கும் அதிகரிக்கப் பெற்றுப் பலருஞ் சேர்ந்து பாடவொண்ணாத தாகின்றது. தாழ்ந்த மெட்டுகளானாற் பலர் சேர்ந்து பாடவொண்ணும். உயர்ந்த மெட்டுகளாயின் ஒருவரே பாடமுடியும். மேனாடுகளில் எல்லாரும் பாட விரும்புவர். அதனால் மக்களின் நால்வகைக் குரல்களுக்கு மேற்றபடி நால்வேறு சுருதிகளை வைத்துக் கொண்டு ஒருங்கே பலரும் பாடுவதற்கான தாழ்ந்த மெட்டுகளை யமைத்திருக்கின்றனர். கீழ் நாட்டிலோ இனிய குரலில்லா விடிற் பாட விரும்பார். அதோடு உயர்ந்த இசைகளையே கேட்க அவர்க்கு விருப்பம். தாமாகக் கர்ண கடூரமாய்ப் பாடு வதிலும், செவிக்கின்பமாகப் பிறர் பாடுவதிலேயே அவர்க்கு ஆனந்தமும் பத்திச்சுவையு முண்டாகின்றன. இதனாற்றான் இனிய வாத்தியங்களையும் பஜனைக்குழாங்களையும் இந்துக் கோயில்களில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஆகவே மேனாட் டார்க்கு இசைவு (Harmony)ம் கீழ் நாட்டார்க்கு இனிமை (Melody)ம் பிரதானமென்பது புலனாகின்றது.

தமிழ்நாட்டிசையின் தன்மையைச் சற்றுமுணராத சில தாந்தோன்றிகள் தமிழ்ப்பாட்டு சபைக்குதவா தென்று பழித்து வருகின்றனர். இது கொடிமுந்திரி எட்டாத குள்ளகரி கூற்றுக்கே யொப்பாகும். மேனாட்டிசையிலும் சபைக்குதவாத