பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ழத்தேவர்

நித்திய ஜீவனை முன்நிமலனாந்தந்தை தந்தார்
குற்றவூண்மாந்தி மாந்தன் குற்றுயிரானான் ஏசு
கற்றவன் தசையிரத்தம் நன்மருந்துணவாய் நல்கச்
சுத்தமாவாவியாரும் சுகம்பெற வீசினாரே.

திரியேக தேவன்

எங்கணும்நிறைந்த செல்வத் திறைவனிலொரு கூறன்றோ
கொங்கலர் நறுந்தண்டாராய் குமானென்றுரைக்குத் தெய்வம்
அங்கவரிருவர்கொண்ட ஆவியே பரிசுத்தாவி
தங்குமோ ஆவியின்றித்தம்பிரான் வினையுமுண்டோ.

அவையடக்கம்

பாட்டுடைத் தலைவனந்தப் பரமனே யவனோர்காலும்
கேட்டினையடையானாகக் கிளப்பதென் பொருத்தமின்மை
நாட்டியல் வழுக்களைந்தும் நம்பனோர் பொருளாக்கொள்ளான்
காட்டுறப் பிழைகடோன்றாக் கல்வி நூலுலகத்துண்டோ.

 

உலகநேசர்க்குரைப்பது.

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.


கவலைமிகு முலகியலோர் கனவாகி யுடம்புவிழும்
கண்ணுவதேன் செல்வ போகம்
அவநிகழு மாசைவழிச் சென்றுதிரு வடைந்தாரும்
ஆசையென எல்லைகாணார்
பவநெறிசே ரெரிவிலகிப் பண்ணவனாங் கிறிஸ்தேசு
பாதார விந்தஞ் சேர்தி
அவனி முழுதுடையானும் ஆன்மாவை யிழந்துறூஉம்
ஆதாயம் யாதுமாதோ.

ஆசை = 1. விருப்பம் 2. திசை