பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

173


வீச்சு! அன்று நம்மைக் காப்பாற்றியவர் திருவில்லிபுத்துார் கணக்குப் பிள்ளையாவார். கரூரில் தி.க வினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! திராவிட கழகத்தினர் மதவாதிகளுக்கு என்று பத்து வினாக்களை எழுதி அச்சிட்டுத் தமிழ்நாடு முழுதும் வழங்கினர். இந்த வினாக்களுக்கு விடை தயாரித்தும் மேலும் பத்து வினாக்களை திராவிடக் கழகத்தினரைக் கேட்கும் வடிவத்திலும் நூல் வெளியிட்டது. அருள்நெறித் திருக்கூட்டம். பிரசங்கங்கள் சூடாக இருந்தன.

22

தொடக்க காலத்தில் நாம் பெரும்பாலும் வியாழக் கிழமைதோறும் திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) சென்று வழிபட்டு வருவது வழக்கம். நமக்குத் திருவாசகத்தில் நிறைந்த ஈடுபாடு. நாட்காலையில் திருவாசகத்தைச் சிந்தித்தும் பாடியும் நடை பயிலுதல் பழக்கம்; இல்லை, வழக்கம். விடியற்காலையில் அருட்பாடல்களைச் சிந்திப்பது அதிகப் பயன்தரும். ஆயினும், வாயினால் சொன்னால்தான் புறத்தே செல்லும் பொறிகளை, புலன்களை மீட்டுக் கொணர இயலும்,

திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) மாணிக்க வாசகப் பெருமானால் கட்டப்பெற்றது. சிற்ப வேலைப் பாடுகள் அமைந்த திருக்கோயில். இங்கே எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் அருள்மிகு ஆத்மநாதசுவாமி. மாணிக்க வாசகர் திருவாசகத்தில் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே! என்று அருளிச்செய்துள்ளார். ஆதலால் ஆன்ம நாயகன், ஆத்மநாதசுவாமி என்றெல்லாம் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.

ஆன்மாவைக் கிராமப்புறத்தார், ஆவி என்பர். ஆன்ம நாயகர் என்பது ஆவி உடையார் என மருவியது. ஆவி என்பது பொருள் பிறழ உணரலாயிற்று. சோற்று ஆவி உடையார் எனப் பொருள் கொண்டு புழுங்கல் அரிசிச்