பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் வடக்குக் கோபுர வாசலில் உள்ளது மொட்டைக் கோபுரம் முனிஸ்வர சுவாமி கோயில், இந்தக் கோயில் பூசாரி யாழ்கீத சுந்தரம் பிள்ளை. குழைந்த அன்பினர்; வழங்கும் இயல்பினர்; நம்பால் தாயிற் சிறந்த பரிவினர். இவர் திருவாதவூர்த் திருக்கோயிலுக்கு ஒதுவார்.

திருவாதவூர் தமிழ் வழங்கிய நிலம்; புண்ணியத் திருத்தலம். 'புலனழுக்கற்ற அந்தணாளர் கபிலர்' தோன்றிய புண்ணிய பூமி, மாணிக்கவாசகர் திருவவதாரம் செய்த திருத் தலமும் திருவாதவூரே! ஆதலால், யாழ்கீத சுந்தரம்பிள்ளை திருவாதவூரில் திருவாசக விழாவைத் தொடங்கினார். (இப்போதும் காரைக்குடி-திருவாதவூர் ஆகிய ஊர்களில் தொடர்ச்சியாக திருவாசக விழா கொண்டாடி வருகின்றனர்!) கார்த்திகை மாதம் 4-வது திங்கட்கிழமை யன்று தொடர்ந்து திருவாதவூரில் திருவாசக விழா தவறாமல் நடைபெற்று வருகிறது. நாம் இவ்விழாவில் கலந்துகொள்ளும் கடமையில் தவறியதில்லை. யாழ்கீத சுந்தரம்பிள்ளை அமரர். அவருடைய அருமைப்புதல்வர் சுந்தரம் முறையாக நடத்தி வருகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருப்பெருந் துறை திருவாசக விழாவுக்கு அழைக்கப்பெற்றார். கம்பன் அடிப்பொடி சா. கணேசன் மற்றும் அறிஞர்கள் பலர் அழைக்கப் பெற்றனர்.

காலை 9 மணிக்கு ஊர்வலம் ஆவுடையார் கோயிலில். 'திருவாசக விழா' ஊர்வலத்தில் ஏராளமான அன்பர்கள், பக்தர்கள்! பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் வெண்கலக் குரலில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் சிவபுராணம் ஒத, அருள்நெறித் திருக்கூட்டக் கொடிகளுடன் ஊர்வலம்! இந்த ஊர்வலத்துக்குப் போட்டியாக இரு பக்கத்திலும்-திராவிடர் கழகக் கொடிகளுடன் பாலைவனம்