பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



27

சுதந்திரப் போராட்டம் 1942-ல் சூடுபிடித்தது. அண்ணல் காந்தியடிகள் தைரியமும் மன உறுதியும் படைத்தவர். ஆயினும், சுதந்திரப் போராட்டங்களில் கூட்டத்தைக் கூட்டவோ வன்முறைகளைப் பயன்படுத்தவோ விரும்புவதில்லை. கூட்டத்தைக் கூட்டுவது எளிது. ஆனால், அந்தக் கூட்டத்தைக் கட்டுப்பாடாகக் கொண்டு செலுத்துவது கடினம் என்பதை நாட்டு வரலாறு உணர்த்துகிறது. ஆதலால், அண்ணல் காந்தியடிகள் 1942-ல் சுதந்திரப் போராட்டத்தைத் தனி நபர் சத்தியாக்கிரக இயக்கமாகத் தொடங்கினார். அந்தத் தனி நபர் சத்தியாக்கிரகத்துக்கு முதல் மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார் புனிதர் வினோபாபாவே, மாணவப் பருவத்தில் லட்சிய மனிதராக ஏற்றுக்கொள்ளப் பெற்ற ஒருவரை ஒரு மாமனிதரை வாழ்க்கையில் நேரில் காணவும் அவருடன் பணி செய்யவும் நமக்குக் கிடைத்த பேறு பெரும்பேறு என்று எழுதவும் வேண்டுமா?

புனிதர் வினோபாபாவே தவமுனிவர்; ஞானி; பலனில் பற்றின்றிப் பணி செய்த உத்தமர் வினோபாபாவே. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நிர்மாண வேலைகளில் ஈடுபட்டார். இந்தச் சூழ்நிலையில் சுதந்திர இந்தியாவில் நிலப்பிரச்னை தீராமல் இருந்தது. 1947-ல் இயற்றப்பெற்ற ஜமீன்தாரி இனாம் ஒழிப்புச் சட்டம் மூலம் ஓரளவு தீர்வு கிடைத்தது. ஆயினும் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளிகள் பல கோடியினர். நிலத்தை உழுது பிழைத்த விவசாயிகள், குத்தகை விவசாயிகள் மற்றும் கூலி விவசாயிகளேயாவர். இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் செய்ய அவசியம் இருந்தது. இருக்கிறது. 1951-ல் தெலுங்கானாவில் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கலவரம் தோன்றியது. அப்போது வினோபாபாவே சமாதான யாத்திரையாக நாடு தழுவிய நிலக்கொடை