பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

205


அமைச்சர் தொண்டைமானின் முயற்சி கைகூடவில்லை. மீண்டும் நாம் வற்புறுத்தியதன் பேரில் I.P.K.F. விமானத்தில் செல்ல அனுமதி வாங்கினார். இந்த விமானத்தில் செல்வது உரிய பயனைத் தராது என்று கருதி நாம் மறுத்துவிட்டோம்!

ஆக, 1968-க்குப் பிறகு நாம் இலங்கை செல்லவில்லை. இனி என்று கைகூடுமோ? திருவருள் என்ன நினைத் துள்ளதோ? இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் "விதியே! விதியே! தமிழச்சாதியை என்செய நினைத்தாய்?" என்ற பாரதியின் புலம்பலையொட்டி நாமும் புலம்ப வேண்டியதுதானா?

இலங்கைப் பயணங்களில் இலங்கை மண்ணின் மைந்தர்கள் சிலரின் அறிமுகம் கிடைத்தது நல்ல பேறு. செந்தமிழ்ச் செல்வர் முதலியார் சின்னத் தம்பி. இவருக்கு முதலியார் என்பது பட்டப்பெயர். நல்ல பண்பாளர். யாழ்ப் பாணம் பகுதிப் பயணத்தின்போதெல்லாம் இவருடைய ஊராகிய வட்டுக்கோட்டையில் இவர் வீட்டில் தங்குவது வழக்கம். நாம் தங்குவற்கென்றே இவர் ஒரு வளமனை கட்டி, அதற்கு குன்றக்குடி என்று பேரும் சூட்டினார். இவருக்கு இரண்டு மகளிர் மட்டுமே! மூத்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இரண்டாவது மகள் பெயர் குஞ்சு படுசுட்டி! குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே இந்தப் பெண் நமக்குப் பழக்கம். இன்று இவர் கொழும்பில் வாழ்கிறார். நல்ல குடும்பம்! விருந்தளிப்பில் ஆர்வம் காட்டும் குடும்பம்! அடுத்து, பண்டிதர் துரைசிங்கம், இவர் மனைவி சத்திய தேவி. இவர்களிருவரும் இப்போது அமரர்கள். இவர்கள் நீர்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஈழத்துச் சிவானந்தன் புங்குடு தீவைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரர் சிதம்பர ராமலிங்கம் இந்துக் கல்லூரியில் பணி செய்தார். இந்துக் கல்லூரி நிர்வாகிகள் நமக்கும் பெரியாருக்கும் உள்ள நட்பு கருதி முதலில் மறுத்தனர். ஈழத்துச் சிவானந்தன் போராடி வெற்றிபெற்றார். ஈழத்துச் சிவானந்தன் துடிப்புள்ள