பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

213


கோயிலுக்குள்ளேயே திருக்குளம்! கட்டுமானத்துடன் கூடிய திருக்குளம்! ஆயினும் திருக்குளம் முழுதும் துர்ந்து குப்பை மேடாகிவிட்டது. 1953-ல் தண்டியடிகள் நினைவாக 30 நாட்கள் துர்வை எடுக்கப் பெற்றது. மதுரை மாநகர மக்கள்; மாணவர்கள், தொழிலாளர்கள் முதலியோர் ஒத்துழைப்புத் தந்தனர். இதுபோன்ற பணிகளைச் செய்வது தான் புராணங்களைப் போற்றும் நெறி!

இன்று நமது மக்களிடையே திருக்கோயில்கள், திருக் குளங்கள் இவற்றைப் பேணும் மனோநிலை அருகி வருகிறது மதுரை பொற்றாமரைக் குளம், மயிலை கபாலீசுவரர் திருக்கோயில் குளம் ஆகியவற்றின் தண்ணிர் வரத்துக்கால்களைத் துரர்த்து வீடுகள் கட்டிவிட்டனர். அதனால் தண்ணிர் வரத்து இல்லை. தெப்பக்குளம், நீர் நிலைகளை அமைத்தல் சமயஞ்சார்ந்த சமுதாய அறம் என்பதை நமது மக்கள் மறந்தது வருந்தத்தக்கது. அறம் செய்தலைவிட அறத்தைக் காப்பதுமேல் என்பதை நமது மக்கள் உணர வேண்டும்.

திருஞானசம்பந்தர் அடிச்சுவட்டில், பாலின்றி அழும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்குப் பால் வழங்கல், குழந்தை காப்பகங்கள் நடத்தல், அப்பரடிகள் அடிச் சுவட்டில் உழவாரத் திருத்தொண்டு செய்து நம்முடைய திருக்கோயில்களைப் பாதுகாத்தல், தண்டியடிகள் அடிச் சுவட்டில் திருக்குளங்கள் தூய்மை செய்தல் முதலிய பணி களைச் செய்யலாம். பட்டியல் போட்டால் விரிவடையும். இன்று திருத்தொண்டு செய்தால் புராணம் புத்துயிர்ப்புப் பெறும். மக்களையும் வளர்க்கலாம்; சமய நெறியையும் வளர்க்கலாம். இன்றைய உலகு அவாவி நிற்பது தொண்டு களையே!

இன்றும் திருச்சியைப் பொறுத்தவரை அனைவரும் அருள்நெறி இயக்கத்தில் உள்ளனர். அருள்நெறித் திருக் கூட்டத்துக்குக் கிடைத்த தீவிர ஊழியர் தொட்டியம் வீ.கிருஷ்ணமூர்த்தி. இன்றும் இடைவிடாது பணி செய்து