பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நோயும்-தன்னலமும்

சிலர் எத்தகைய நோயும் இல்லாதவர்கள் போலத் தோன்றுவார்கள். அவர்களின் புறத்தோற்றம் அப்படி யிருந்தாலும், அவர்களினுள்ளே தோன்றி வளர்ந்து கொண்டு வந்துள்ள நோய் திடீரென்று உடலைத் தாக்கி வருத்தும். அதுபோல சிலர் உள்ளத்திலே தோன்றி வளரும் தன்னலம் என்ற பெருநோய் திடீரென ஒருநாள் சமுதாயத்தையே தாக்கி வருத்தும்.

சோஷலிசத் தாக்குதல்

புதிய காற்று சிலருக்கு உடல்நலக் குறைவை உண்டாக்குவது போல, புதிய தண்ணிர் சிலருக்கு ஜலதோஷத்தை உண்டாக்குவது போல சோஷலிசம் சிலரின் சுகபோக சுரண்டலுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

கழனியும்-கருத்துக்களும்

நெல் விளையும் கழனியிலே புல்லும் முளைப்பது போல, மனித சமுதாயத்தின் கருத்துக் குவியல்களில் நல்லனவும் தீயனவும் தலைகாட்டவே செய்யும், கழனியில் களை எடுப்பது போல, கருத்துக் கழனியிலே தீமைகளை நீக்கி நல்லனவற்றைப் பாதுகாத்துப் பயன்பெற வேண்டும்.

இயந்திரமும்-ஆன்மாவும்

ஒரு பெரிய வண்டியை அதனுள் நுட்பமாக அமைந்திருக்கும் இயந்திரம் இயக்குவதுபோல, மனிதனை அவனுள்ளிருக்கும் ஆன்மாவே இயக்க வேண்டும்.

இறைவனின் திருப்தி

கவிதையைப் பாராட்டுவதன் மூலம் அதைப் பாடிய கவிஞனைத் திருப்திப்படுத்துவது போல, ஓவியத்தைப் பாராட்டுவதன் மூலம் அதை வரைந்த ஓவியனைத் திருப்தி