பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மில்லாத வழிபாடு பயனற்றது” என்றார் அண்ணல் காந்தியடிகள்!

நாம் அனைவரும் ஆன்மாவில் சிறந்து விளங்குவதே இலட்சியம்! ஆன்மாவை உசுப்பிக்கொள்ள, விழிப்புறச் செய்யத் தேவையான அளவு சடங்குகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், சடங்குகளே ஆன்மிகம் அல்ல; சமயமும் அல்ல!

எங்கும் சோலைகளை வளர்ப்போம்! இயற்கையோடு இயைந்து வாழ்வோம்! நெஞ்சத்தை தண்ணளி உடையது ஆக்குவோம்! அன்பில் வளர்வோம்! அன்பில் வாழ்வோம்! வாழ்வித்து வாழ்வோம்! உயிர்க்கு ஊதியம் சேர்க்கும் தொண்டு செய்வோம்! வன்முறை தவிர்ப்போம்! எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் கொலையை பழிதூற்றும் சிறுமையைத் தவிர்ப்போம்! யாரிடமிருந்தும் எவரிட மிருந்தும் அந்நியமாக மாட்டோம்! ஒருமையுணர்வுடன் எவ்வுயிரிடத்தும் பேதமுறாது பேணிக் காப்போம்!

மானிட சமுத்திரம் நம்முடன் பிறந்து வளர்ந்தது: உடன் வருவது. அந்த மானிட சமுத்திரத்திற்குள் சங்கமம் ஆவதே ஆன்மிக வாழ்வு! "இவர் தேவர், அவர் தேவர் என்று இரண்டாட்டாது சமயக் கலகம் செய்ய வேண்டாம்! என்றார் அப்பரடிகள் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்!” இதுவே ஆன்மிக வாழ்க்கையின் தாரகமந்திரம்.


"ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி"


என்ற சிந்தனை நமது வாழ்வாக மலரவேண்டும்.

அன்பர்க்ளே! நமது வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறது? உண்டியை, உடையை உகந்து மகிழும் வெற்று வாழ்க்கையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கை மடைமாற்றம் செய்வோம்! வாழ்வாங்கு வாழும் திசையில்