பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/541

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

529


பெறுவதற்குரிய வாயில்களே ஆகும் எனவும் கூறி கல்விக்கு இலக்கணம் கூறுகிறார்.

இயற்கை வழங்கும் கொடைகளில் ஒன்று தாய்மொழி. தாய்மொழியே சிந்தனை மொழி, உணரும் மொழி என தாய்மொழி வழிக் கல்விக்கு வித்திடும் பாங்கு புகழத்தக்க வகையில் அமைந்துள்ளது. உழைப்புச் சிந்தனைகள் என்னும் பொருளில் சோம்பலுடனும், சோர்வுடனும், நூற்றாண்டுகள் வாழ்வதைவிட பெருமுயற்சி, கடின உழைப்புடன் ஒருநாள் வாழ்ந்தால் கூடப்போதும் என்னும் பொன்மொழி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.

உழைப்பு; அறிவு உழைப்பு, உடல் உழைப்பு என இரண்டாக பகுத்து அறிவு உழைப்பு எவ்வகையிலும் உடல் உழைப்பைத் தாழ்த்தக்கூடாது என வரலாற்றுச் சிறப்புகளுடன் நிறுவும் பாங்கு நிலை பேருடையது. வளர்ச்சி மாற்றம் என்னும் பொருளில், வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல. பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதும் அல்ல. எதிர்காலத்தை நோக்கி நடை போடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி, மாற்றம் என விளக்கும் பாங்கு சிறந்தது.

பொருளாதாரச் சிந்தனைகள் என்னும் பகுதியில் உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு அன்று, வாங்கும் சக்தியே ஆகும் எனக் கூறும் வரையரை, வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை எனவும், ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை எனவும் இவர் வகுக்கும் இலக்கணம் வானுயர நிற்பதாகும். வேளாண்மைச் சிந்தனைகள் என்னும் பொருளில் வரப்புகளே அதிகம் என நம்முடைய ஒருமைப்பாட்டின்மையை உணர்த்துகிறார்.

கால்நடைப் பொருளாதாரச் சிந்தனைகள் என்னும் பகுதியில் கால்நடைகள் இல்லையேல் விவசாயம் இல்லை, உணவு இல்லை, ஏன் மனிதகுல வாழ்க்கையில் கால்நடைகள்