பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/548

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

536

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்


என்னும் இந்து மதத்தின் பேருண்மையை வெளிக்கொணர்கிறது.

தவயோகி அடிகளாரின் அருள்வாக்கு நால்வரில் மூவரின் சிறப்பு இவற்றை அருமை சீனி.திருநாவுக்கரசு அவர்கள் நூலாக்கியதற்குத் தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.

அன்புடன் கி. வேங்கடசுப்பிரமணியன்


25. மண்ணும் மனிதர்களும்


1996 மே

பேராசிரியர்
க. அன்பழசன் சென்னை
கல்வி அமைச்சர் 16-5-96


தமிழ் நாட்டு மக்களின் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரியவராக விளங்கிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தொண்டு பல திறப்பட்டதாகும்.

இளமைப் பருவத்தில் வறுமையிலும் கல்வியில் ஆர்வம்; தாய்மொழியில் பற்று, சைவத்தில் ஈடுபாடு; பின்னர் தரும் ஆதீனத்தில் தொண்டு, அதன் விளைவாகத் துறவு தம்பிரான் நிலை, பின்னர் குன்றக்குடி சைவ மடத்தின் ஆதீனமாகப் பொறுப்பேற்றல் என்னும் வகையில் தகுதியால் உயர்ந்த அடிகளார் மக்கள் நலன் நாடும் மனவளம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

நாடு விடுதலை பெற்றுப் பல பத்தாண்டுகள் கடந்தும் வறுமையும், எழுத்தறிவின்மையும் ஒழிக்கப்படாமையையும்; பிறவி வழிப்பட்ட சாதி வேற்றுமை நாளும் உரம் பெற்று வருவதையும் எண்ணிக்கவலை கொண்டார். சம்பிரதாயம்'