பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

541


திருவருள் திரு திருவண்ணாமலை
தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக ஆதீனம்
பரமாசாரிய சுவாமிகள் குன்றக்குடி 630 206
(ஆதீனகர்த்தர்) தமிழ்நாடு


தொடர் பயணம்!

(மண்ணும் மனிதர்களும்)

ஒரு வரலாறு, தம் வரலாற்றை எழுதியுள்ளது. ஒரு காப்பியம் தாமே தம்மைப் பற்றி அடிமுதல் முடிவரை அளந்து பார்த்திருக் கின்றது. இஃது ஒரு சுய விளம்பரம் அல்ல, தற்பெருமை அளக்கின்ற தம் முகவரியும் அல்ல; எதிர் காலம் எந்தச் சார்புக்குள்ளாவது சிக்கி மிதமிஞ்சிய அன்புணர்வில் மிகைப்படுத்தி எழுதிவிடக்கூடாது என்ற கவன உணர்வு காரணமாக இருக்கலாம்.

இந்த வரலாறு இருளில் திசை தெரியாமல் தட்டு தடுமாறுகின்ற கலங்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காய் வாழ்ந்து காட்டிய அருள்நெறித் தந்தை அவர்களின் வரலாறு, எப்பொழுதும் துயரப்படுகின்ற முகவரி தெரியாப் பயணி களுக்கு நன்னம்பிக்கை முனை; வாழத் தெரியாத வர்களுக்கு வாழும் இலக்கணம் கற்றுத் தரும் ஆத்திசூடி, "கண்டதே காட்சி! கொண்டதே கோலம்!” என்று வாழ்கின்ற தற்சார்புக் காட்சிக்காரர்களுக்குத் தத்துவ போதனை; உலகம் வாழ வாழ்வதுதான் துறவுநெறி என்ற புதிய நெறி கண்ட புது வேதம், பொது நன்மைக்காக வளைந்து கொடுக்க மறுக்கின்ற, மரபுகளை உடைத்தெறிந்த-மடாலயங்களின் வரலாற்றில் புதிய் துணைவிதித் திருத்தம்; அசுத்தம் நிறைந்த உடலைத் தீர்த்தமாடி ஆலயப் பிரவேசம் செய்வதுபோல் ஏழ்மையை விரட்டிவிட்டு ஆண்டவனைத் தேடச் சொன்ன அக்கினிப பிரவேசம், சாதிகளுக்கு மகுடம் சூட்டிப் பட்டுப் பாவாடை விரித்துக் கொண்டிருந்த சனாதனிகளின் சிம்ம சொப்பணம்; இல்லாமையாலும் கல்லாமையாலும் ஏங்கிக் கொண்டிருந்த