பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவர்கள், “நீ சன்யாசியாய்ப் போய்விட்டதால் உனக்குச் சொத்தில் உரிமை இல்லை” என்று சொல்லி விட்டார்கள். அதனால் வக்கீலைக் கலந்து ஆலோசித்தேன்.

வக்கீல், “நீங்கள் சன்யாசியாய்ப் போயிட்டீங்க. தவிரவும் நீங்க இன்னும் மேஜர் ஆகலை. அதனால் நான் ஒண்ணுமே பண்ண முடியாது” என்று சொல்லிவிட்டார். அதனால்தான் நான் சன்யாசம் வாங்கிக் கொண்டபோது என் வயது என்ன என்பதை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது.

மூளைச் சோம்பல் கொள்ளாதீர்

ர வரப் பட்டிமன்றங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. எப்போதுமே ஒரு விஷயம் ஜனங்களிடையே பிரபலமாகத் தொடங்கினால் அதன் தரம் தாழ்ந்துவிடுவது இயல்பு. இதைச் சரி செய்ய வேண்டுமென்றால் படித்தவர்கள் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். .

ஆனால் படித்தவர்களுக்கே இப்போது மூளைச் சோம்பல் ஏற்பட்டுவிட்டது. தொடர்ந்து படிக்கவேண்டும், சிந்திக்க வேண்டும் என்ற எண்ணமே இருப்பதில்லை. அதனால் கையில் கொஞ்சமாய்ச் சரக்கு வைத்துக் கொண்டு. நிறையக் கதை விடுகிறார்கள்.

ஒரு சமயம் மயிலை கபாலி கோயிலில் ஒரு பட்டி மன்றம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘தந்தது வந்தன்னைக் கொண்டது என் தன்னை யார்கொலோ சதுரர்..’ என்ற திருவாசகத்தை மையமாய் வைத்து, சதுரர் சிவபெருமானா, மாணிக்கவாசகரா என்று பட்டி மன்றம். முதல் ரவுண்டு முடியப் போகும் நேரத்திலேயே பட்டி மன்றத்தின் தரம் கொஞ்சம் தாழ்ந்த மாதிரி தோன்றியது. மாலைநேரம்,