பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

85


உள்ளூர் காங்கிரஸ்காரர்களும் நம்முடனேயே சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்தனர்.

மாலை மூன்று மணிக்கு காமராஜர் வந்தார். திருக்கோயில் சார்பில் பிரசாதம் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பெற்றது. திருக்கோயில் வளாகத்திலேயே கூட்டம்! காமராஜரை வரவேற்று மஞ்சள் பெட்டிக்கு வாக்குக் கேட்டு நாம் பேசினோம்! ஆம்! அன்று தேர்தல் சின்னம் இல்லை! பெட்டிதான்! காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டி! "நாம் எல்லோரும் மாவட்டக் கழகத் தேர்தலில் காங்கிரஸுக்கு மஞ்சள் பெட்டியிலேயே வாக்களிக்க வேண்டும்-ஏன்? நமது கண்ணுக்கு மஞ்சள் பெட்டியா தெரிகிறது! இல்லை! இல்லை! அந்த மஞ்சள் பெட்டியில் காணப்படும் ரத்தக் கறைகளைப் பாருங்கள்! இந்த மஞ்சள் பெட்டியின் வடிவத்தில் பகத்சிங் ஆவி வாக்குக் கேட்கிறது”! என்று அன்று நாம் பேசினோம் காமராஜருக்கு அளவற்ற மகிழ்ச்சி. வரவேற்பின்போது வழக்கமான மௌனத்தில் பார்த்தவர், பேச்சு முடிந்த பிறகு நன்றாகப் பழகினார்; பேசினார்!

அன்று தொடங்கிய காங்கிரஸ்-அரசியல் ஈடுபாடு இன்று வரை குறையவில்லை. தலைவர் காமராஜர் மூலமாக அரசியல் தேர்தல் ஈடுபாடு தொடங்கியது. அந்த ஈடுபாடு 1967-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தல்வரை நீடித்தது. தமிழ்நாடு முழுதும் தேர்தல் மேடைகளில் காங்கிரஸுக்காக காமராஜரின் தலைமைக்காக வாக்குகள். கேட்ட காலம் பசுமையாக நினைவில் இருக்கிறது. 1967 பொதுத் தேர்தலில் காமராஜர் தோற்ற பிறகு அரசியல் தேர்தல் உலகிலிருந்தே காலம் பயனுடையதாக இருந்தது.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1955-ல் தமிழ்நாட்டைப் பெரும்புயலும் மழையும் பாதித்திருந்தது. காமராஜர் மிகவும் கவலைக்குள்ளானார். ஊர்தோறும் விரைவாகச் சென்று