பக்கம்:குறட்செல்வம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்செல்வம்🞸67

கெடுப்பதால் அழுக்காறு கொடுமையினும் கொடுமையானது. வள்ளுவரே 'பாவி’ என்று வசைபாடுவாராவின் நம்நிலை என்ன? - -

அழுக்காறு கொள்ளுதல் தீது. முற்றிலும் உண்மை—முக்காலும் உண்மை. எந்த ஒரு தீமையும் தோன்றாமல் தடுப்பதும் பாதுகாக்க வழிவகை உண்டல்லவா? அத் தீமை தோன்றாமல் தடுப்பதும் சமுதாய நெறியில் மிகச் சிறந்ததாகும். கயவர்களின் அழுக்காறு மாற்ற முடியாதது. அவர்கள் கொல்லத்தான் பயன்படுவார்கள். ஆனாலும், சாதாரண — நடுத்தர மக்களிடமிருந்து அழுக்காற்றை அகற்ற, உடையோர் முயன்றால் முடியும். அழுக்காறு கொள்ளுதல் எப்படித் தீதோ அப்படியே, பிறர் எளிதில் அழுக்காறு கொள்ளும்படி நடந்து கோள்ளுதலும் தீதாகும்.

அதனால் செல்வம் உடைமையினும் எளிய வாழ்க்கை — கொடுத்து, உவந்து — ஒப்புரவு அறம்பேணி வாழ்தல் அவசியம். அறிவுடைமையில் தன்னடக்கம் தேவை. புகழை விரும்பாமல் அடக்கமாய் வாழ்தல் அவசியம். பிறர் புகழ்ந்து கூறும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவிர்க்க முயலவேண்டும். இங்ஙனம் வாழ்ந்தால் இல்லாதோரிடம் அழுக்காறு எழாமல் — தோன்றாமல் தவிர்க்கலாம். காரணம் அங்கு இன்மை அவ்வளவு பெரியதாகத் தோற்றம் அளிக்காது.

அழுக்காறாமை குணத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதன் முயற்சி, மற்றவர்கள் எல்லாவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புதல் — பிறர் இன்பத்தில் தான் மகிழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் அழுக்காறு அகலும் — அருளியல் தோன்றும்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/69&oldid=1553814" இலிருந்து மீள்விக்கப்பட்டது