பக்கம்:குறட்செல்வம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25. தீயும் தீவினையும்


தற்காத்துக் கொள்ளுதல் என்பது இயல்பான உயிரியல் உணர்வு. உயிர்வர்க்கம் எல்லாமே தம்மைத் துன்பத்தினின்றும் மரணத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றன — முயற்சி செய்கின்றன.

விலங்கியலில் உயிர் அறிவும் உணர்வும் மிகமிகக் குறைவு. மனித இயலிலும் உடலியலை விட உயிர் உணர்வும் அறிவுமே மிகுந்து காணப் பெறுகின்றன. அது இயற்கை பரிணாம வளர்ச்சியிலும் கூட இதுவே நியதி.

விலங்குகள் உடல் தற்காப்பிலேயே ஈடுபடும். உயிரியல் அறிவு கைவரப்பெற்றமையின் காரணமாக மனிதன் ஆன்மாவையும் தற்காத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறான். அதனாலேயே விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும், விருப்பம், சிந்தனை ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி வற்புறுத்தப் பெற்றன. 'தீவினை அச்சம்' என்றே திருக்குறள் அதிகார வைப்பு ஒதுகின்றது.

தீவினை செய்தலில் அச்சமல்ல — தீவினை பற்றிய அளவிலேயே அச்சம்! பெருவெள்ளத்தைக் கண்டு விலகி ஓடுதல் போன்றது. தீவினையுணர்வுகளினின்றும் அஞ்சி, ஒதுங்கிக் கொள்ளுதல் தனக்குத்தான் உண்மையான அறிவொடுபட்ட விருப்பம் இருக்குமாயின் அவன் பிறருக்கு யாதொரு தீங்கும் — சிறியதேயாயினும் செய்யற்க என்று திருவள்ளுவர் வற்புறுத்துகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/82&oldid=1553852" இலிருந்து மீள்விக்கப்பட்டது