பக்கம்:குறட்செல்வம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்செல்வம்🞸83

தன்னையே நோக்கித் தன் தீமை கருதி, அழுது, தன் கண்ணீரால், தன்னுடைய தீமையைக் கழுவுதலேயாம்.

ஆனால், மனிதனின் வியாபாரப் புத்தியும், சோம்பலும் இந்தக் தூய சமயத்தையும் விட்டபாடில்லை. இதன் விளைவகாவே புரோகித சமயம் தோன்றிற்று. ஒருவருக்காகப் பிறிதொருவர் அழத் தொடங்கிவிட்டனர். பாபர் போல அழுதால் பயனிருக்கலாம். அது உண்மையிலேயே அழுறது. ஆனால், இவர்கள் அழுவதோ பெறக்கூடிய காசுகளுக்கேயாம். காலப் போக்கில் அழுவதுகூட விடுபட்டுப் போயிற்று. அவர்கள் சமயத்தின் முதலாளிகளாகி விட்டார்கள்.

முழுநிலவை மறைத்த நிழலைக் கருதி முதலைக் கண்ணீர் வடித்துக் குளத்தில் மூழ்கும் மனிதர்கள்—நிறைவுடைய நன்னெறியாம் சமயத்தில் படிந்த தீமையை நினைத்து அழாதது. ஏனோ? ஒருவனிடமுள்ள தீமையை அவனே உணர்ந்துதான் மாற்றிக்கொள்ள முடியும். பிறர் அணைக்கும் தீயைவிட தம்மிடமே உள்ள பொறுப்பான தீமை கொஞ்சம் சிக்கலானதேயாம்.

அதோடு, தீ எரியத் தொடங்கியவுடனேயே வெளிப் படையாகத் தெரிகிறது. ஆதலால், உடனடியாக அணைக்கும் முயற்சியும் தோன்றிவிடுகிறது. ஆனால், தீமையோ உடனடியாகத் தெரிவதில்லை. உடனிருந்தும் ஒட்டியும், பச்சை உறவு காட்டியும் இன்ப நயங் காட்டியும் பையப்பைய அரித்துக் கெடுப்பது.

பலர், தன்னிடமுள்ள தீமையையேகூட அறியாமையின் காரணமாக நன்றென்றே கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது “அவரிடமில்லையா? இவரிடமில்லையா? அதற்கு இது என்ன மோசம் போய்விட்டது?” என்று சமாதானம் கற்பித்துக் கொள்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/85&oldid=1562413" இலிருந்து மீள்விக்கப்பட்டது