பக்கம்:குறட்செல்வம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறட்செல்வம்🞸87

உடையன. ஈகை வழிப்பட்ட சமுதாயத்தில், உடையோர் —இல்லோர் என்ற வேற்றுமை விரிந்திருக்கும். அவ்வழிப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் தலைதுாக்கி நிற்கும். ஒப்புரவு, அறிதலில் உடையோர் இல்லோர் வேற்றுமையின்றி, உயர்வு தாழ்வு இன்றிக் கொடுத்தல் கடமை எனவும், கொள்ளல் உரிமை எனவும் கருதும் அடிப்படையிலேயே அந்த அதிகாரம் அமைந்துள்ளது.

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

என்பது திருக்குறள். இங்கு ஒத்தது என்ற சொல்லுக்கு வழக்கம்போல பரிமேலழகர் 'உலக நடையினை' என்று எழுதித் தப்பித்துக்கொண்டு விட்டார். அது நிறைவான கருத்தன்று. 'தன்னைப்போல் பிறரை நினை' என்பது ஒரு விழுமிய ஒழுக்க நெறிவாக்கு.

இன்றையச் சமுதாயத்தில் பலர் தம்மோடு பிறர் ஒத்துவர வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர பிறரோடு தாம் ஒத்துப்போக வேண்டும் என்று கருதவில்லை.

பலருக்கு எது ஒத்ததோ அதற்கு சிலர் இணங்கியே வாழவேண்டும். அதுவே சமுதாய நியதி — ஒழுக்கம். அங்ஙனம் உணர்ந்து வாழ்பவர்களே வாழ்பவர்கள். அவர்கள் வாழ்க்கையிலேயே இன்பமும் அமைதியும் இருக்கும். மற்றோர்க்கும் அவர்தம் வாழ்க்கையால் பயனுண்டு.

இங்ஙனம், ஒத்தறிந்து ஒழுகத் தெரியாதவர்கள் வாழ்ந்தாலும் நடமாடினாலும் பிணம் என்றே கருத வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. காரணம், பிணத்திற்கு மனித உருவ அமைப்பு இருந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/89&oldid=1554736" இலிருந்து மீள்விக்கப்பட்டது