பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 195

இருவரில் யாராவது ஒருவர் உடன் வந்தால் நல்லதென்று அந்த அம்மா கருதுகிறார்கள்' என்று நடக்க வேண்டிய காரியத்தை அவசரப்படுத்திக் கொண்டு சொன்னாள் பூரணி.

'முருகானந்தம்! நீ இவர்களோடு திருச்சிக்குப் போய் விட்டு வா. தையற்கடைச் சாவியை என்னிடம் கொடுத்து விட்டுப் போ, கடை வேலையாட்கள் வந்தால் நான் சாவியைக் கொடுத்து விடுகிறேன்' என்று முருகானந்தத்தைப் புறப்படச் சொன்னான் அரவிந்தன்.

'நான் எதற்கு அரவிந்தன்? அந்த அம்மாவும் பூரணியக்காவும் போனால் போதுமே துணைக்கு கார் டிரைவர் இருப்பான்."

'இல்லை, நீ கட்டாயம் போக வேண்டும். ஏதாவது வம்பு வந்தாலும் சமாளிப்பதற்கு நீ தான் சரியான ஆள். மறுக்காமல் போய்விட்டு வா. கார் பெரியது. மணிக்கு ஐம்பது மைல் போனால் எப்படியும் பகல் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம். அரவிந்தன் இவ்வாறு வற்புறுத்தவே முருகானந்தத் தால் தட்டிக் கழிக்க முடியவில்லை. தையற் கடைச் சாவியைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டான். போகும் போது பூரணி அரவிந்தனிடம் கூறினாள். -

'நீங்கள் ஓர் உதவி செய்யவேண்டும், அரவிந்தன் முடிந்தால் இந்தப் பையனைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து கண்டிக்க வேண்டும். எக்கேடும் கெட்டுப் போகட்டும், என்று தான் பேசாமல் இருக்க முயன்றேன். ஆனால் மனம் கேட்கவில்லை. உடன் பிறந்த பாசம் எதையாவது நினைத்து வேதனைப்படச் சொல்கிறது.' - -

'யார், உன் தம்பி திருநாவுக்கரசைப் பற்றித் தானே சொல் கிறாய்! நான் பார்த்து அழைத்து வருகிறேன். நீ போய் வா' என்றான் அரவிந்தன். -

பூரணியையும் முருகானந்தத்தையும் அனுப்பிவிட்டு உள்ளே வந்து அமர்ந்தான் அரவிந்தன். முதல் நாள் மாலைக்குப் பின் நடந்த நிகழ்சிகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்த போது அவன் உள்ளம் தெளிவிழந்து தவித்தது. பூரணியின் தம்பி கெட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/197&oldid=555920" இலிருந்து மீள்விக்கப்பட்டது