பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அஞ்சல் நிலையம்

துன்புறுத்த வேண்டாம்" என்று மக்களுக்கு ஆணையிட்டார். இவர் புத்தரின் அறவுரைகளில் நாட் டம் கொண்டார். புத்த சங்கத்தில் சேர்ந் தார். பல புண்ணிய இடங்களுக்குச் சென்று வணங்கினார். நாடெங்கும் பல தூபிகளை எழுப்பினார். அவற்றில் எல் லாம் புத்தரின் அருள்மொழிகளைப் பொறித்து வைத்தார். பல கல்வெட்டுக் களின் மூலம் புத்தருடைய அறவுரை களைப் பரப்பினார். அயல்நாடுகளிலும் பௌத்த சமயத்தைப் பரப்பப் பல சான் றோர்களை அனுப்பினார். இலங்கைக்கு இவருடைய மகள் சங்கமித்திரையும். மகன் மகேந்திரனும் சென்றார்கள். அசோகருடைய காலத்தில்தான் இலங்கை யிலும், கம்போடியா முதலிய கிழக்கு நாடுகளிலும் பெளத்த சமயம் பரவியது. நாடு முழுவதும் தருமசாலைகள் நிறுவி, அன்பையும் அஹிம்சையையும் மக்கள் கைக்கொள்ளுமாறு செய்தார். குடிமக்களைத் தம் குழந்தைகளாகவே நேசித்தார். இந்திய வரலாறு கண்ட பெரிய மன்னர்களில் இவர் ஒருவர். இவர் புத்தருடைய அறவுரையைப் பரப்பினாரல் லவா? அந்த அறவுரைகளில் கீழ்க்கண்ட வற்றை நீங்கள் முக்கியமாக நினைவில் வைத்துக்கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். "தாயிடமும், தந்தையிடமும், பெரிய வர்களிடமும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். எல்லா உயிரினங்களையும் அன் புடன் நேசிக்க வேண்டும். உண்மையே பேச வேண்டும். அஞ்சல் நிலையம்: தூரத்தில் உள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நாம் கடிதம் எழுதுகிறோம்: சில சமயம் தந்தி கொடுக்கிறோம்; பணம் அனுப்புகிறோம். இவை எல்லாம் அவர்களிடம் எப்படிப் போய்ச் சேருகின்றன? அஞ்சல் நிலையந் தான் இந்த வேலைகளைச் செய்கின்றது. அஞ்சல் நிலையம் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் உண்டு. நாம் ஒரு கடிதம் எழுதி அஞ்சல் பெட் டியில் போடுகிறோம். இவ்வாறே பலரும் போட்டிருப்பார்கள். அவற்றை எல்லாம் எடுத்து, அவற்றின்மேல் உள்ள அஞ்சல் தலைகளின் மீது முத்திரை குத்துவார்கள். WORK அஞ்சல் பெட்டியில் கடிதத்தைப் போடுதல் பின்பு கடிதங்களை எல்லாம். மோட்டார் வண்டிகள், ரெயில் வண்டிகள், விமானங் கள் செல்லும் ஊர்களுக்கு ஏற்பப் பிரிப் பார்கள். அவற்றைப் பைகளில் இட்டுக் கட்டி அந்தந்த வண்டிகளுக்கு அனுப்பு வார்கள் அஞ்சல்களைப் பிரித்துக் கட்டி அனுப்புவதற்கென்றே சில பெரிய ஊர்களில் தனி அலுவலகங்கள் உண்டு. கடிதங்களைப் பெட்டி யில் போட்டாலே போதும். ஆனால் சில முக்கிய கடிதங்களை நாம் பத்திரமாக அனுப்ப வேண்டியிருக்கும். அதற்காகப் பதிவு அஞ்சலிலோ, இன்ஷூர் செய்தோ அவற்றை அனுப்பலாம். சாதாரணக் இவை தவிர ரேடியோ லைசென்ஸுக் காக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் அஞ்சல் நிலையத்திலேயே செலுத்திவிடலாம். சிறுகச் சிறுகப் பணம் சேமிக்கும் சேமிப்புப் பாங்கும் இங்கு உண்டு. உள்நாட்டு அஞ்சலுக்குச் செலுத்தும் கட்டணம் தூரத்தைப் பொறுத்து மாறு படுவதில்லை; ஆனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் கடிதங்களுக்கு, அத்நாடுகளின் தூரத்தைப் பொறுத்துக் கட்டணம் வேறுபடும். கடிதங்களின் எடையைப் பொறுத்தும் கட்டணம் வேறுபடும்.