பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்லான்டிக் சமுத்திரம் -- அடிப்படை உரிமைகள்

7

பெரிய நகரங்களில் இயங்கு அஞ் சல் நிலையங்கள் உண்டு. இவை மோட் டார் வண்டிகளில் அமைந்துள்ளன. முக் கிய வீதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் நிற்கும். முக்கிய அஞ்சல் வேலைகளை இவை செய்கின்றன. நாம் எழுதும் கடிதங்கள் விரைவாக வும், ஒழுங்காகவும் போய்ச் சேரவேண் டும் என்றால், முகவரியைச் சரியாகவும் தெளிவாகவும் எழுதவேண்டும்; போது மான அஞ்சல் தலை ஒட்டவேண்டும். அட்லான்டிக் சமுத்திரம் : அமெரிக் காக் கண்டத்தைப் புது உலகம் என்று சொல்லுவார்கள். ஏன் தெரியுமா? சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை அவ் வாறு ஒரு கண்டம் இருப்பதே ஐரோப்பிய மக்களுக்குத் தெரியாது. அதற்குக் கார ணம் ஐரோப்பாக் கண்டத்திற்கும், அமெ ரிக்காக் கண்டத்திற்குமிடையே பெரிய சமுத்திரம் ஒன்று இருப்பதுதான். இதன் பெயர் அட்லான்டிக் சமுத்திரம். உலகில் உள்ள சமுத்திரங்களில் மிக வும் பெரியது பசிபிக் சமுத்திரம். அதற்கு அடுத்தது அட்லான்டிக் சமுத் திரம். இது பசிபிக் சமுத்திரத்தின் பரப் பளவில் சுமார் பாதி இருக்கும். இதில் உள்ள தீவுகளில் பிரிட்டிஷ் தீவுகள், ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, நியூபவுண்டுலாந்து, மேற்கிந்தியத் தீவு கள் ஆகியவை முக்கியமானவை. அட்லான்டிக் சமுத்திரத்தின் அடி யில் வடக்குத் தெற்காக ஒரு நீண்ட மலைத் தொடர் உள்ளது. சமுத்திரத்தின் மத்தி வட அமெரிக my அட்லான்டிக் சமுத்திரம் - அடிப்படை உரிமைகள் அட்லா தென் அமெரிக்கா டிக் சமுத்திரம் B ஆப்பிரிக்கா 7 யில் உள்ள தீவுகள் இம்மலைத் தொடரின் சில உச்சிப் பகுதிகள்தாம். இச்சமுத்திரத் தில் மிகவும் ஆழமான இடம் போர்ட்ட ரீக்கோ பள்ளம் ஆகும். அதன் ஆழம் 30,000 அடி; அதாவது சுமார் 5} மைல். அட்லான்டிக் சமுத்திரத்தில் மீன் மிக வும் அதிகமாகக் கிடைக்கிறது. நியூ பவுண்டுலாந்துக்கு அருகில் உள்ள கிராண்டு பேங்க் என்னும் மீன் பிடிக்கும் துறை புகழ்பெற்றது. ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்கா விற்கும் இடையில் அட்லான்டிக் சமுத் திரத்தின் அகலம் சுமார் 4,000 மைல் களுக்கும் அதிகம். இச் சமுத்திரத்தில் மிகவும் அகலமான பகுதி இதுதான். மேலும் இப்பகுதியில் மிதக்கும் பனிப் பாறைகளாலும், புயல் முதலியவற் கப்பல்களுக்கும் தீங்கு நேரிடுவது உண்டு. நீரரவிக் கப்பல்கள் இல்லாத காலத்தில் இந்தச் சமுத் திரத்தைக் கடப்பது மிகவும் கடினம். பல துன்பங்களுக்கிடையே இதை முதன் முதல் கடந்து வெற்றி பெற்றவர் கொலம் பஸ் ஆவார். றாலும் பெரிய நாள்தோறும் நூற்றுக்கணக்கான கப் பல்கள் அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து செல்கின்றன. எனவே இது பயன்படும் மிகப் பெரிய கடல் வழிகளில் ஒன்றாகும். போக்குவரத்திற்குப் அடிப்படை உரிமைகள்: ஒரு நாட்டு மக்களின் நன்மையைக் கருதி அரசாங்கம் சட்டங்களை இயற்றுகிறது. அந்தச் சட்டங் களுக்கு மக்கள் கீழ்ப்படிந்து நடந்தால் தான் அவர்கள் அமைதியாகவும், இன்ப மாகவும் வாழ முடியும். ஆனால், மக்களுக் குச் சில முக்கியமான உரிமைகள் வழங் கப்பட்டுள்ளன. இந்த உரிமைகளுக்கு அடிப்படை உரிமைகள் என்று பெயர். தன் உயிர், உடல், பொருள் ஆகிய வற்றைக் காத்துக்கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் எல் லார்க்கும் ஒரே விதமான சட்டம்; சாதி, மதம் என்று பாராமல் எல்லார்க்கும் ஒரே விதமான மதிப்பு; அரசாங்க வேலைகளில் அமர எல்லார்க்கும் சமமான உரிமை. இவை அடிப்படை உரிமைகளின் சில முக் கியமான அமிசங்கள். இந்த உரிமைகளை அரசாங்கம் மறுக்க முடியாது. பாது)3