பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அடைகாக்கும் பெட்டி - அணில்

எல்லா மக்களும் எந்தக் காலத்திலும் இவற்றை அனுபவிக்கலாம். இந்த உரிமை களைச் சட்டசபையும் குறைக்க முடியாது; அரசாங்கமும் மாற்ற முடியாது. இந்தியாவின் அரசியல் அமைப்பில் மக்களுக்குப் பல அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. 1. சாதி, மதம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக் கும் சம உரிமை; வேலை வாய்ப்பு. 2.மக்கள் கூட்டங்கள் கூடித் தத்தம் கருத் துக்களைப் பேசவும், எழுதவும், வெளியிட வும் உரிமை உண்டு. 3. எவரும், தரும வழியில் தமக்கு விருப்பமான எந்தத் தொழிலையும், நாட்டில் எந்த இடத்திலும் சமூக நலனுக்குத் தீங்கு விளையாத வகையில் செய்யலாம். 4. சொத்துக்களை வாங்கவும் விற்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. 5. குழந்தைகளிடமும் வயது முதிர்ந்தவர்களிடமும் வற்புறுத்தி வேலை வாங்குவதை எதிர்த்துப் போராடலாம். 6. எல்லா மதத்தினரும் தத்தம் கொள் கைகளுக்குத் தக்கவாறு கல்விக் கூடங்கள் அமைத்துக் கொள்ளலாம். 7. இந்த அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மக் கள் நியாயம் பெறலாம். ( அடைகாக்கும் பெட்டி ( Incubator): முட்டையில் வருகிறது. கோழி அடைகாப்பதால் குஞ்சு வளர்ந்து வெளியே ஆனால், கோழி அடைகாக்காமலேயே முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதற்கு உதவும் சாதனம் ஒன்று உண்டு அதுதான் அடைகாக்கும் பெட்டி. முட்டையில் குஞ்சு வளர்வதற்குப் போதுமான அளவுக்கு வெப்பம் வேண் டும். கோழி அடைகாக்கும்பொழுது அந்த அளவுக்கு வெப்பம் உண்டாகிறது. அடை காக்கும் பெட்டி அதே வெப்பத்தைச் செயற்கை முறையில் அளிக்கிறது. படத்தில் காட்டியிருப்பது சாதாரண வகை அடைகாக்கும் பெட்டி. முட்டைகளை ஒரு தட்டில் அடுக்கி அதனுள் வைத்து விடுவார்கள். பெட்டியின் முன்புறம் கண் ணாடியால் ஆனது. அதன் வழியாகப் பெட்டிக்குள் வெளிச்சம் செல்லும். மின் சாரத்தின் உதவியால் பெட்டிய புறம் வெதுவெதுப்பாக உட் இருக்கும்படி செய்வார்கள். பெட்டிக்குள் அதிகமான வெப்பமும் கூடாது, அதிகக் குளிர்ச்சியும் 8சிசி3 அடைகாக்கும் பெட்டி கூடாது. நம் அறையின் சாதாரண வெப்ப நிலையைவிட அதிகமாக இருக்க வேண்டும் (38.5°). பெட்டியினுள் சூடு ஏறாமலும் இறங்காமலும் ஒரே அளவாக இருக்கும்படி செய்யக் கருவிகள் பொருத் தப்பட்டுள்ளன. முட்டைகளிலிருந்து குஞ் சுகள் வெளிவர 21 நாள்கள் ஆகும். அதுவரை அடிக்கடி முட்டைகளைப் புரட்டி வைக்கவேண்டும். ஒரே சமயத் தில் நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்துக் குஞ்சு பொரிக்கச் செய்யலாம். குஞ்சுகள் முட்டையினின்றும் வெளி வந்தவுடன் பெட்டியின் முன்பக்கத்தில் உள்ள கண்ணாடி வழியாக வரும் வெளிச் சத்தை நோக்கிச் செல்லும். தட்டின் விளிம்பிற்குச் சென்றதும் அதற்கு அடியில் உள்ள மற்றொரு தட்டில் அவை விழுந்து விடும். அங்கிருந்து அவற்றை வெளியே எடுத்துக்கொள்ளலாம். அணில்: அணில் ஓர் அழகான சிறு பிராணி. இது துள்ளிக் குதித்து ஓடுவதை யும், 'கீச்கீச்' என்று கத்துவதையும் நாம் கண்டு மகிழ்ந்திருக்கிறோம். இதை அணிற் பிள்ளை என்று செல்லமாக அழைக்கிறோம். இது கொட்டையையோ சிறு பழத் தையோ முன் கால்களில் பற்றிக்கொண்டு, கொறித்துத் தின்பதால் இதைக் கொறிக் கும் பிராணி இனத்தைச் சேர்ந்தது என்று சொல்லுவார்கள். அணில்களில் பலவகை உண்டு. சில எலியைப்போலச் சிறிதாக இருக்கும். பூனை அளவு பெரிதாகவும் சில இருக்கும். நாம்