பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலெர்ஜி - அலைகள்

29


விலும், ஆசியாவிலும் கிரேக்க நாகரிகத் தைப் பரப்பவும் விரும்பினார். இவர் வென்ற நாடுகளில் பல நகரங்களை அமைத் தார். அங்கெல்லாம் கிரேக்கர்களைக் குடியேற்றினார். கிரேக்கர் பலருக்குப் பார சீகப் பெண்களை மணஞ் செய்வித்தார். இவரே ஒரு பாரசீக இளவரசியை மணந்து கொண்டார். இவருடைய போர் வீரர்கள் தம் நாட்டைவிட்டு வந்து எத்தனையோ ஆண்டு கள் ஆயின. அவர்களுக்கு வீட்டு ஏக்கம் அதிகமாயிற்று. அதனால் அவர்கள் மேலும் மேலும் போரில் ஈடுபட மறுத்துவிட்டனர். அலெக்சாந்தர் ஏமாற்றத்துடன் தம் நாட்டை நோக்கித் திரும்ப வேண்டிய தாயிற்று. திரும்பிச் செல்லும் வழியில் இவர் நோயால் மாண்டார். அலெர்ஜி (Allergy) : பால், கோதுமை, ரொட்டி, முட்டை இவை நல்ல உணவுப் பொருள்கள். ஆயினும், இந் தப் பொருள்களில் ஒன்றிரண்டு சிலருக்குப் பிடிப்பதில்லை. அதை உண்ட உடனே அவர்களுக்குத் தலைவலி, வயிற்று வலி, உடம்பு எரிச்சல் போன்ற தொல்லைகள் வரும். இன்னும் சிலருக்குப் பூக்களை முகர்ந் தாலே நோய் வரும். மற்றும் சிலருடைய உடம்பில் கம்பளம், முகப்பூச்சுத் தூள், தலையணை, துடைப்பத் தூசு இவை பட்டவுடனே சொறி உண்டாகும்; காய்ச்ச லும், ஆஸ்த்துமாவும் தலைவலியும் வந்து விடுவதுண்டு. காரணம், சில பொருள்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளுவதில்லை. இதற்குத்தான் அலெர்ஜி என்று பெயர். அலெர்ஜியால் வரும் நோய்களுக்கு மருந்தே தேவையில்லை. அலெர்ஜியைக் கொடுக்கும் பொருள் எது என்று முத லில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு நோயாளி அதை விலக்கிவிட வேண்டும். ஆனால், பால், ரொட்டி போன்ற முக்கிய மான உணவுகளை எப்படி விட்டுவிடுவது? முடியாதல்லவா? இதற்கு ஒரு வழி உண்டு. இவை எவரெவருக்கு நோய் உண்டாக்கு கின்றனவோ அவர்களுக்கு ஐந்தாறு மாதம் இவற்றைக் கொடுக்காமலே இருக்க வேண் டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துவர வேண்டும். அப்போது அலெர்ஜியைத் தடுக்கும் சக்தி உடம்பில் தானாக உண்டாகிவிடும். 29 அலைகள்: கடல் அலைகள் சுருண்டு சுருண்டு கரையின்மேல் வந்து மோது வதைக் காண மிகவும் அழகாக இருக்கும். காற்று வீசுவதால் நீரின்மேல் அலைகள் எழுகின்றன. வேகமாக வீசும் காற்றில் அலைகள் உயரமாக எழும்பும். கடும் புயலில் அலைகள் மலைபோன்று உயரும். பரந்த நீர்த்தேக்கங்களிலும் அலைகள் வீசு கின்றன. ஆனால் கடல் அலைகள் மிகவும் பெரியவை. குளம், குட்டைகளில் தண் ணீரின் அளவு குறைவு. அதனால் அங்கு எழும் அலைகள் சிறியவை. அலைகள் எழுவதற்கு வேறு காரணங் களும் உண்டு. சந்திரனும், சூரியனும் பூமியை ஈர்க்கின்றன. இதனாலும் கடல் களில் பெரும் அலைகள் உண்டாவதுண்டு. பௌர்ணமியன்றும், அமாவாசையன்றும் அலைகள் அதிகமாக இருக்கும். அந்நாள் களில் சந்திரனுடைய ஈர்ப்பும், சூரியனு டைய ஈர்ப்பும் இணைந்து ஒருமுகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். பூமி அதிர்ந்தாலும், கடல் அடியில் எரிமலை வெடித்தாலும் கடலில் கொந்தளிப்பும், உயர்ந்த அலைகளும் உண்டாகும். . புயல் காற்றினால் ஏற்படும் அலைகள் மிகவும் பயங்கரமானவை. ஒரு பனைமரம் உயரங்கூட அவை எழும்பும். கடற் கரையோர ஊர்களை இவை மூழ்கடித்து விடுவதுண்டு. அலைகள் அடித்து மோதிக் கரையையே அரித்துவிடுகின்றன. கற் பாறைகள் நிறைந்த கரையும் இவற்றிற் குத் தப்புவதில்லை. ஆனால், சில இடங் களில் பரந்த அழகிய மணல்வெளிகள் தோன்றுவதற்கும் அலைகளே காரணம். பார்க்க: ஏற்றவற்றம்.