பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

அழகுக்கலைகள்

அழகுக் கலைகள்: நாம் அழகான ஓவியங்களையும், சிற்பங்களையும் பார்த்து மகிழ்கிறோம். இசை நமக்கு இன்பம் ஊட்டுகிறது. எத்தனையோ பாடல்கள் நம் உணர்ச்சியைத் தூண்டுகின்றன. நமக்குப் புதுப்புது இன்பங்களையும், புதுப்புது உணர்ச்சிகளையும் வழங்கும் இவை அழகுக் கலைகள் ஆகும். அழகுக்கலைகள் நாட்டியம் ஆடுதலும், கண் கவரும் கட்டடங்களைக் கட்டுவதும் அழகுக்கலை களேயாம். நாடகத்தையும் கவிதையை யும் அழகுக்கலைகளாகக் கருதுவதுண்டு. ஓவியங்களில் கோடுகளின் நெளிவுகளும், வண்ணச் சேர்க்கைகளின் அழகும் சிறப்பை அளிக்கின்றன. அதைப்போல இசையிலும், நாடகத்திலும் சொற்களின் சுவையும், இசையின் இனிமையும் கலந்து இன்பம் கொடுக்கின்றன. உயர மான கோபுரங்களையும், பெரிய பெரிய மாளிகைகளையும், அவற்றை அலங்கரிக்கும் அழகான சிற்பங்களையும், ஓவியங்களையும் கண்டு நாம் வியக்கிறோம். ஆடலும் கட்டடக் கலை மதுரையிலுள்ள திருமலை நாயக்கன் மகால் ஓவியக் கலை மொகலாய ஓவியம் பாடலும் கலந்தது நாட்டியம். நாடகத் தில் எல்லாமே உண்டு. ஓவியம், இசை, ஆடல், பாடல் இத்தனையும் சேர்ந்தது அது. அழகுக்கலைகள் எல்லாருக்கும் பொது. எந்த விதமான பேதமும் இன்றி, இவை தரும் இன்பத்தை மக்கள் அனுபவித்து மகிழலாம். பண்டைக் காலத்தில் குகையில் வாழ்ந்து வந்த மக்கள் குகைச் சுவர்களின்மேல் பல சித்திரங்களைத் தீட்டினர். தம் வேட்டைக் கருவிகளிலும், அவற்றின் பிடிகளிலும் அழகழகான உருவங்களைச் செதுக்கினர். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களிலும், எகிப்திலும் பூமியிலிருந்து மண்பாண்டங்களும், அலங்காரப் பொருள்களும் கிடைத்துள்ளன. அழகுக் கலைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன என்பதை இவை எடுத்துக்காட்டு கின்றன. இந்திய நாட்டு அழகுக் கலைகள் உலகப் புகழ் பெற்றவை. பார்க்க: மொகஞ்சதாரோ, ஹரப்பா, எகிப்து. பல சிற்பக் கலை செப்புச் சிலை அழகுக் கலைகளில் சில நாட்டியக் கலை பரதநாட்டியம் இசைக் கலை வீணை