பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அன்னம்

அன்னம்: அன்னம் ஓர் அழகான பறவை. இதன் நிறம் வெள்ளை. இதன் கழுத்து நீண்டு வளைந்திருக்கும். உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறது. தண்ணீரிலே நீந்தும்போது அன்னத்தின் உடல் அசைவதே இல்லை. இது பார்ப் பதற்கு விந்தையாகத் தோன்றும். இதன் கால் விரல்கள் மெல்லிய தோலால் இணைக் கப்பட்டிருக்கின்றன. அதனால் ஒவ்வொரு காலும் ஒரு துடுப்புப்போல இருக்கிறது. அதன் உதவியால் அன்னம் உடலைச் சிறிதும் அசைக்காமல் நீந்துகிறது. அன்னத்தின் சிறகுகள் (தூவிகள்) மிகவும் மென்மை யானவை. புழு, நத்தை, மீன் முட்டைகள், சிறு சிறு மீன்கள், இலை, வேர், கிழங்கு, தண்டு, விதை ஆகியவற்றை இது தின்கிறது. இது தனது நீண்ட கழுத்தை நீருக்குள் விட்டுத் துழாவி இரை தேடும். நீர்நிலை யின் ஓரத்தில் செடிகளைச் சேர்த்துக் கூடு கட்டும். கூட்டின் உள்புறம் இதன் மெல் லிய சிறகுகளைப் பரப்புவதால் மெத்தென்று இருக்கும். காரன்னம் சில அன்னங்கள் ஆறு அடி நீளமும், இரண்டடி உயரமும் உள்ள பெரிய கூடுகளை அமைக்கும். இக்கூட்டில் குஞ்சுகள் வள ரும். பெரிய குஞ்சுகள் தாய் அன்னத் தோடு இரை தேடிச் செல்லும். அவை தாயின் முதுகின்மேல் ஏறிக்கொண்டு போகும். எதையேனும் கண்டு பயந்தால் தாயின் சிறகுகளுக்குள் ஒளிந்துகொள்ளும். அன்னங்கள் பலவகைப்படும். அவற்றுள் ஒரு வகையைச் சேர்ந்த அன்னம் அதிக மாகக் கத்துவதில்லை. ஆகையால் இதற்கு அன்னம் என்று பெயர். இதன் அலகு சிவப்பாக இருக்கும். ஊமை இனிமையான குரலில் கூவிக்கொண்டே பறக்கும் ஒருவகை வெள்ளை அன்னத் திற்குச் சீழ்க்கை அன்னம் என்று பெயர். ஆஸ்திரேலியாவில் மற்றும் ஒருவகை அன்னம் இருக்கிறது. இதன் உடல் முழுவதும் கறுப்பாகவோ, அல்லது சாம்பல் நிறமாகவோ இருக்கும். ஆதலால் இதைக் காரன்னம் என அழைப்பார்கள். வெள்ளை நிறமும், கறுப்பு நிறமும் கலந்த அன்னங்களும் உண்டு. அன்னம் சுமார் 25 ஆண்டுகள் உயிர் வாழும். ஊமை அன்னம் சீழ்க்கை அன்னம்