பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனதன்புள்ள குழந்தைகளே,

நீங்கள் அன்பிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஒழுக்கத்திலும் எந்நாட்டவர்க்கும் சமமாக, அவர்களைவிடச் சிறப்பாக வளர வேண்டும். இந்தக் குழந்தைகள் கலைகளஞ்சியம் வெளியிடப்படுகிறது.

உங்களுக்கு விளங்கும் வகையில் எளிய நடையில் வண்ணப் படங்களுடன் இது அமைந்துள்ளது. பல நூற்றுக் கணக்கான பொருள்களைப் பற்றி எழுதியிருப்பதால் கட்டுரைகள் சுருக்கமாக இருக்கும். அவற்றைப் பற்றி இன்னும் விரிவாக அறிந்துகொள்ள இந்தக் கலைக்களஞ்சியம் ஒரு தூண்டுகோலாக இருக்குமென்று நம்புகிறோம்.

இக் கலைக்களஞ்சியத்திலுள்ள கட்டுரைகளுக்கு இடையிடையே அடைப்புக் குறிகளுக்குள் ‘த. க’என்று கொடுக்கப்பட்டிருக்கும். ‘த. க’ என்பது தனிக் கட்டுரை என்பதன் சுருக்கம். ஆகவே இக் குறிப்புக்கு முன்பாக உள்ள பொருளைப் பற்றி இக்கலைக்களஞ்சியத்தில் தனிக் கட்டுரை ஒன்று அகரவரிசைப்படி அதற்கு உரிய இடத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளவேண்டும். வெப்ப நிலைகளைக் குறிக்கும் போது, °என்ற குறி போடப்பட்டிருந்தால், அது சென்டிகிரேடு அளவையைக் குறிக்கும். இக் குறியுடன் ‘பா’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருந்தால் அது பாரன் ஹீட் அளவையைக் குறிக்கும்.

கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளில் ஆங்காங்கு ‘பார்க்க’ என்ற குறிப்பைத் தொடர்ந்து வேறு தனிக் கட்டுரை கள் சிலவற்றின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுரைகளையும் சேர்த்துப் படித்தால், ஒரு பொருளைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

நீங்களே நம் நாட்டின் எதிர்காலச் செல்வங்கள். அறிவுத் துறைகள் பலவற்றிலும் நீங்கள் சிறந்து விளங்குவதே நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும். நீங்கள் அறிவும் ஒழுக்கமும் ஆபற்றலும் பெற்று மேன்மை அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.