பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ஆதிச்சநல்லூர் - ஆந்திரப் பிரதேசம்

ஆதிச்சநல்லூரில் கிடைத்த வெண்கலப் பொருள் தார்கள். அத்தகைய ஊர்களில் ஒன்று தான் ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூர் திருநெல்வேலிக்குத் தென் கிழக்கில் பதினைந்து மைல் தொலை வில் உள்ளது. முதன் முதலில் 1876-ல் இங்கு ஆராய்ச்சி நடந்தது. இங்குத் ஆதிச்சநல்லூரில் காணப்பட்ட தாழிகள் அவை தோண்டிய பள்ளங்களில் பலவகையான பெரிய பெரிய மண்பாண்டங்கள் கிடைத் துள்ளன. உருண்டையாகவும், முந்திரிப் பழம் போலவும், நீண்ட மாட்டுத் தொட்டியைப் போலவும் உள்ளன. சூளை யில் நன்றாக வெந்துள்ளன. எல்லாம் நல்ல மெருகுடன் உள்ளன. இப் பாண்டங்களுக் குத் தாழிகள் என்று பெயர். அக்காலத்துத் தமிழர் சிலர் இறந்தவர் உடலை இத்தாழி களில் இட்டுப் புதைப்பது வழக்கம். உடலுடன் தாழியின் உட்புறத்திலோ, வெளியிலோ பொன்னாலான நெற்றிப்பட் டம், துணிகள், வெண்கலக் கொத்து விளக்குகள், அகல்கள், வளையல்கள், இரும்பாலான அம்புகள், வாள்கள், சூலங் கள் ஆகியவற்றையும் வைத்துப் புதைத் துள்ளார்கள். பழந் தமிழரின் நாகரிகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள இவ்வூர்ப் புதைபொருள் கள் பெரிதும் உதவியாக உள்ளன. 'ம காராஷ் ர ரிஸ்ஸா morty ம் 8 விசாகப்பட்டினம் வங்காள விரிதடா ஆமிழ் நாடு ஆந்திரப் பிரதேசம்: இந்தியாவின் 17 மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் ஒன் றாகும். இது தமிழ்நாட்டை ஒட்டி வடக் குப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு மேற்கே மைசூர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும், வடக்கில் ஒரிஸ்ஸா, மத் தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் எல்லைகளாக உள்ளன. கிழக்கு எல்லை வங் காள விரிகுடா. ஆந்திரப் பிரதேசம் சமவெளிகள் நிறைந்த ஒரு மாநிலமாகும். கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரை, வடபெண்ணை முதலிய ஆறுகள் இம் மாநிலத்தில் பாய் கின்றன. எனவே இங்கு நெல் மிகுதியா கப் பயிராகின்றது. இங்குக் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், நிமிகிரி மலைகள் முதலிய மலைகளும் உள்ளன.