பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

ஆப்பிரிக்கா

52 ஆப்பிரிக்கா உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் இதுதான். இதன் பரப்பு 35 இலட்சம் சதுர மைல்! இங்கு மழை பெய்வதில்லை. பகலில் வெயில் கடுமையாயிருக்கும்; இரவில் குளிர் அதிகமாயிருக்கும். திடீர் திடீரென்று சூறாவளிகள் தோன்றும். சகாரா பாலைவனத்தில் ஆங்காங்குள்ள நீரூற்றுகளைச் சுற்றிலும் பேரீச்சம் பழ மரங்கள் செழித்து வளர்கின்றன. ஆப்பிரிக்காவின் கடலோரச் சமவெளி களிலும், புல்வெளிக் காடுகளிலும் கரும்பு, கோதுமை, அரிசி, அவரையினங்கள், பருத்தி, புகையிலை, நிலக்கடலை, கோக் கோ, காப்பி ஆகியவை ஏராளமாக விளை கின்றன. அன்னாசி, வாழை, ஆரஞ்சு முதலிய பழத்தோட்டங்களும், ஒலிவ மரங் களும் காணப்படுகின்றன. மத்திய ஆப்பிரிக்காவில் காடுகள் மிகவும் அடர்ந்து நெருக்கமாக வளர்ந் திருப்பதால் பெரிய விலங்குகள் அவற்றுள் நுழைய முடியாது. எனவே மரங்களில் பல வகையான குரங்குகளும், பறவை களும், பூச்சிகளும் மட்டும் உயிர் வாழ் கின்றன. புல்வெளிக்காடுகளில் மான், ஒட் டகச் சிவிங்கி, வரிக்குதிரை, காண்டா மிருகம், காட்டெருமை, சிங்கம், சிறுத்தை கழுதைப்புலி ஆகியவற்றைக் காணலாம். யானைகளும் ஏராளமாக உண்டு. ஆப் பிரிக்க யானைகளின் காதுகள் மிகவும் பெரியதாக இருக்கும். பாலைவனங்களில் ஒட்டகங்களின் மேல் சுமையைத் தூக்கிச் செல்வார்கள். பல நாள்கள் உணவோ, தண்ணீரோ இல்லாமல் பாலைவனத்தில் பயணம் செய்யும் சக்தி ஒட்டகங்களுக்கு உண்டு. தென்னாப்பிரிக்காவில் நெருப்புக் கோழி என்று ஒரு பறவையுண்டு. இது ஒரு விந்தையான பறவை. இது பறக் காது. ஆனால் இது மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடக்கூடியது. கல், ஆணி, எகிப்திலுள்ள பிரமிடுகள் கண்ணாடித் துண்டுகள் அனைத்தையும் இது விழுங்கிவிடும்! குரங்குகளைத் தூக்கிச் செல்லும் பெரிய பெரிய கழுகுகளும் இக் காடுகளில் உள்ளன. இக்கண்டத்தில் தாதுவளம் அதிகம். மிகவும் உயர்தரமான வைரக் கற்கள் கிம் பர்லி சுரங்கங்களில் கிடைக்கின்றன. தங் கம், பிளாட்டினம், அன்டிமனி, ரசாயன உப்புகள் ஆகியவை இங்கு ஏராளமாக உள்ளன. இப்போது சகாரா பாலைவனத் தில் பெட்ரோலியம் எடுத்து வருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து பலர் ஆப்பிரிக்காவில் குடியேறியுள்ளனர். வடக்கே ஆல்ஜிரியாவிலும், தெற்கே தென் ஆப்பிரிக்காவிலும், ரொடீஷியாவிலும் இவர்கள் வாழ்கின்றனர். இவர்களன்றி, எகிப்து, லிபியா, ஆல்ஜிரியா, மொராக் கோ ஆகிய நாடுகளில் இஸ்லாமியர் வாழ் கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் ஆதிக்குடி களான நீக்ரோக்கள் வசிக்கிறார்கள். கிழக் காப்பிரிக்காவிலும், தென்னாப்பிரிக்காவி லும் இந்தியர்கள் குடியேறி வாழ்கின்றார் கள். இப்பகுதிகளில் உழவும், வாணிகமும் செழித்தோங்குவதற்கு இந்தியரின் உழைப்பே முக்கிய காரணமாகும். ஆப்பிரிக்காவில் பல மொழிகள் வழங்கு கின்றன. அவற்றுக்கு எழுத்தில்லை; இலக் கியமும் வளரவில்லை. இக்காரணத்தால் ஆப்பிரிக்க ஆதிக்குடி மக்களின் வரலாற்றை அறிந்துகொள்ள இயலவில்லை. வடக்கே எகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பழைய நாகரிகம் சிறந்து விளங் கிற்று. அக்கால எகிப்தியர்கள் பிரமிடு என்னும் பெரிய பெரிய கோபுரங் களைக் கட்டி அழியாப் புகழ் பெற்றார்கள். இறந்தவர் உடல்களைக் கெட்டுப்போகாமல் காப்பாற்றி வைக்கும் முறையை அவர்கள் அறிந்திருந்தார்கள். எகிப்துக்கு மேற்கில் கார்த்திஜ் என்ற ஒரு பெரிய நகரம் சீரும் சிறப்புமாக விளங்கிற்று. கள் ஆப்பிரிக்காவில் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்கள் குடியேறிப் பல நீக்ரோக்களை வேட்டையாடிச் சிறை பிடித் தனர். சிறை பிடித்த நீக்ரோக்களை அமெ ரிக்காவில் அடிமைகளாக விற்றுப் பண மாக்கினர். ஆப்பிரிக்காக் கண்டம் முழு வதையும் ஐரோப்பிய நாடுகள் துண்டு செய்து தமக்குள் பங்கு போட்டுக் கொண் டன. இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு ஆப்பிரிக்க மக்களிடையே சுதந்தர வேட்கை எழுந்தது. சென்ற பன்னிரண்டு ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் தனித்தனிச் சுதந்தர நாடுகளாகிவிட்டன. பண்டைய ஆப்பிரிக்கர்களுக்குக் கலை பாறை உணர்ச்சி இருந்தது. அவர்கள் களின் மேல் தாம் வேட்டையாடிய விலங்கு