பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பிள் -- ஆபு

53

களின் உருவங்களை அழகாகத் தீட்டியுள் ளனர். இக்கண்டத்தில் ஐரோப்பியர் குடியேறித் தத்தம் பண்பாடுகளைப் பரப் பிய பிறகு பிரெஞ்சு மொழி, ஆங்கிலம், போர்ச்சுகேசிய மொழி ஆகியவற்றில் இலக்கியங்கள் தோன்றலாயின. பிறகு ஆப் பிரிக்கக் குடிகளும் தத்தம் மொழிகளில் கதைகள், பாட்டுகள் எழுதத் தொடங் கினர். ஆப்பிரிக்காவில் இப்போது மொத்தம் 26 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இந் தியாவின் மக்கள் தொகையில் இது பாதி தான்! உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டம் ஆப்பிரிக்கா. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமாகிய சகாரா ஆப்பிரிக்காவில் உள்ளது. ஆப்பிள்-ஆபு உலகிலேயே மிக நீளமான நைல் ஆறு ஆப்பிரிக்காவில் உள்ளது. ஆப்பிரிக்கப் பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகும். ஆப்பிள்: உடல்நலம் தரும் பழங் களுள் ஆப்பிள் ஒன்று. உடலுக்கு வேண் டிய எல்லா விதமான சத்துப்பொருள் களும் இதில் உள்ளன. உலகின் பல பாகங் களில் ஆப்பிள் பயிராகிறது. இதற்கு வெப் பமும், குளிரும் சம அளவில் இருக்க வேண் டும். இந்தியாவில் காச்மீரம், பெங்களூர், நீலகிரி ஆகிய இடங்களில் இது பயிரிடப் படுகிறது. ஆப்பிளில் சுமார் 10,000 வகைகள் இருக்கின்றனவாம்! இவை வடிவம், அளவு, சுவை, நிறம், மணம் முதலிய வற்றில் வேறுபட்டுள்ளன. சில சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறங்களாகவும், இந் நிறங்கள் கலந்தனவாகவும் உள்ளன. நாம் ஆப்பிள் பழத்தை அரிந்து அப்படியே பச்சையாகச் சாப்பிடுகிறோம். ஆனால் சில ஆப்பிள் பழங்கள் புளிக்கும். இவற்றை வேக வைத்துத்தான் உண்ண வேண்டும். சிறுசிறு துண்டுகளாக ஆப்பிளை நறுக்கி உலர்த்திச் சேமித்து வைத்தும் உண்ண இவற்றிலிருந்து சாறு, பாகு, லாம். குழம்பு எனப் பலவகை உணவுப்பண்டங் கள் செய்கின்றனர். கால ஆப்பிள் விதையிலிருந்து செடிகளை உண்டாக்கலாம். ஆனால் இச்செடிகள் வளர்ந்து பலன் கொடுக்க அதிக மாகும். மேலும், இவை சுவையான பெரிய பழங்களைத் தருவதில்லை. ஆகவே நல்ல ஆப்பிள் பழங்களை ஒட்டு மரத்திலிருந்து தான் உற்பத்தி செய்கிறார்கள். அதாவது, 53 வெட்டி ஒரு மரத்தின் கிளை ஒன்றை வேறோர் இளஞ்செடியின் தண்டோடு ஒட்டி இணைப்பார்கள். இதனின்றும் உண் டான புதிய மரம் சத்து நிறைந்த பெரிய பழங்களைக் கொடுக்கும். ஒரு வகை ஆப்பிள் மரத்தின் பூவில், வேறு ஓர் இன ஆப்பிள் மரப் பூவிலிருந்து மகரந்தப்பொடி வந்து படியுமானால், பழங் பெரிதாக இருக்கும். இதற்காக ஒரே தோட்டத்தில் பலவிதமான ஆப்பிள் மரங்களை வளர்ப்பார்கள். கள் ஆப்பிள் மரத்திற்குப் பலவகைப் பூச்சி களால் தீங்கு ஏற்படும். மரத்தைப் பாது காக்க ஏற்ற மருந்தைத் தெளிக்க வேண் டும். ஏற்ற எருவும் இட வேண்டும். இவ் வாறு பேணிப் பாதுகாத்து வந்தால் ஆப் பிள் மரம் பல ஆண்டுகளுக்குப் கொடுத்து வரும். பலன் ஆபு: சித்திரம், சிற்பம் ஆகிய கலைகளில் சிறந்தது இந்தியா. இந்திய மக்கள் சமவெளிகளில் மட்டுமின்றி மலை களின் மீதும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பல கோயில்களைக் கட்டியுள்ள னர். இத்தகைய அழகிய கோயில்கள் பல உள்ளது ஆபு மலையாகும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆர வல்லி மலைத்தொடரைச் சேர்ந்தது இம் மலை. ஆனால் இம்மலை அத்தொடரை விட்டுச் சற்று விலகி நிற்கிறது. இதன் சிகரத்திற்குக் 'குரு சிகரம்' என்று பெயர். இதன் உயரம் 5,650 அடி. மலைச்சரிவிலும், அடிவாரத்திலும் அழகிய சிற்பங்கள் நிறைந்த பல கோயில் களும், சமாதிகளும் உள்ளன. இங்குள்ள இரு ஜைனக் கோயில்கள் முக்கியமானவை இக்கோயில்கள் வெண் சலவைக் கற் களால் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஜைனக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்