பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்கா - ஆல்ப்ஸ்

61

இராமேசுவரத்திற்கு அருகில் காணப்படும் பச்சை ஆல்கா

கோடியம் கடல்பாசி (பச்சை ஆல்கா) உலகில் பல இடங்களில் காணப்படுகிறது பச்சையாக இருப்பதால் இதைப் பாசி என்று சொல்கிறோம். ஆனால் எல்லாப் பாசிகளும் பச்சையாக இருப்பதில்லை. சில சிவப்பாக இருக்கும்; சில நீல நிறம். சில நீலமும் பச்சையும் கலந்தவை; மற்றும் சில பழுப்பு நிறத்தில் இருக்கும். அரேபி யாவுக்கு மேற்கே உள்ள செங்கடலில் சிவப்பு ஆல்காக்கள் நிறைய இருக்கின் றன; அதனால்தான் சில இடங்களில் அக் கடலும் சிவப்பாகத் தோன்றுகிறது. ஆல்காக்களுக்கு வேர், தண்டு, இலை, பூ ஆகிய உறுப்புகள் இல்லை. ஆல்காக் களின் உருவம் பல வகையாக இருக்கும். சில மிகமிகச் சிறியன. இவற்றைக் கண் ணால் பார்க்க முடியாது; சிறிய உருவத்தை மிகப் பெரிதாகக் காட்டும் மைக்ராஸ் கோப் (த.க.) மூலந்தான் பார்க்க முடியும். ஆனால் சில ஆல்காக்கள் 200 அடிக்கு மேலும் வளரும்! சில ஆல்காக்கள் பார்ப் பதற்கு நீண்ட இழைகளைப்போல இருக் கும். இன்னும் சில தட்டையாய்ப் கிளைகளாகப் பிரிந்து இருக்கும். பல ஆல்காக்கள் ஈரம் உள்ள எந்த இடத் திலும் தோன்றும். மண்ணிலும், நீரிலும், மரத்திலும் வளரும். இன்னும் சில பனிக் கட்டிகள் மீதும் படரும். அப்போது அந்தப் பனிக்கட்டிகள் பச்சையாகவோ, சிவப் பாகவோ தோன்றும்! சில ஆல்காக்கள் சிறிய விலங்குகளின் உடலில் ஒட்டி வாழும்; இன்னும் விலங்குகளின் குடலுள்ளேயும் வாழும்; மனிதர்களின் குடலிலும்கூட ஆல்காக்கள் இருக்குமாம்! சில 61 குஜராத் மாநிலத்தில் ஓக்கா துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் காணப்படும் சிவப்பு ஆல்கா ஆல்காக்களில் சுமார் 20,000 வகை உண்டு. பெரும்பாலானவை நீரிலேயே வாழ்கின்றன. ஆல்காக்கள் எல்லாவற்றி லும் பச்சையம் {Chlorophyll ) இருக் கிறது. உணவு தயாரிக்க இந்தப் பொருள் தேவை. மீன்கள், திமிங்கிலம் போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆல்காக்கள் உணவாகின்றன. சில இடங்களில் மக் களும் இதனை உண்ணுகிறார்கள். சில ஆல் காக்கள் சிறந்த உரமாகின்றன. சிலவற்றி லிருந்து அயோடின் (த.க.) தயாரிக்கிறார் கள். இன்னும் சிலவற்றிலிருந்து மருந்துப் பொருள்கள் செய்கிறார்கள். இன்று நீங்கள் பார்க்கும் செடி, கொடி, மரங்கள் எல்லாமே ஆல்காக்களிலிருந்து தான் தோன்றினவாம். உலகில் முதன் முதல் தோன்றிய உயிரினம் மிகச் சிறிய ஆல்காக்கள்தாம் என்று சொல்கிறார்கள். ஆல்ப்ஸ்: ஐரோப்பாவின் மத்தியி லிருக்கும் நீண்ட மலைத்தொடருக்கு ஆல்ப்ஸ் என்று பெயர். இதன் நீளம் சுமார் 660 மைல். இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ் லாவியா ஆகிய நாடுகளிலும் இது பரவி யிருக்கிறது. இம்மலைத்தொடரில் நூற்றுக்கணக் கான சிகரங்கள் உள்ளன. எல்லாவற்றி லும் மிக உயரமான சிகரம் மான்ட் பிளாங்க் என்பது. இதன் உயரம் சுமார் 16,000 அடி. மான்ட் பிளாங்க் என்றால் பிரெஞ்சு மொழியில் வெள்ளை மலை என்று பொருள். எல்லாக் காலங்களிலும் இச்