பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஆல்பேனியா

I SI ஆல்ப்ஸ் மலைகளின் ஒரு தோற்றம் சிகரம் பனி மூடியே இருக்கும். அதனால் இதற்குப் இப்பெயர் வந்தது. இயற்கை ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் அழகு நிரம்பியவை. இங்குத் தெளிவான நீர் நிரம்பிய ஏரிகள் பலவும் வனப்பு மிகுந்த பல பள்ளத்தாக்குகளும் உள்ளன. ரைன், ரோன், டான்யூப், போ ஆகிய ஆறுகள் இம்மலையில் உற்பத்தியாகின்றன. மலையில் ஓக், பைன் போன்ற பலவகை மரங்கள் நெருங்கி வளர்ந்துள்ளன. மலை முயல், வரையாடு, கரடி, மான் முதலியன இம்மலைப் பகுதியில் உயிர் வாழும் விலங்கு கள். தாழ்ந்த மலைச்சரிவுகளில் ஆடுகளும் மாடுகளும் வளர்க்கப்படுகின்றன. பரந்த புல்வெளிகள் இங்கு ஏராளமாக உள்ளன. பனி உறைந்து கிடக்கும் இம்மலை, பனிச் சறுக்கு விளையாட்டுக்கு உகந்த இடம். ஆல்ப்ஸ் மிகச் சிறந்த சுகவாசத்தலமாக வும் உள்ளது. உலகில் பல நாடுகளிலிருந் தும் மக்கள் பெருமளவில் இங்குவந்து தங்கிச் செல்கிறார்கள். ஆல்பேனியா: ஐரோப்பாக் கண் டத்தில் உள்ள ஒரு சிறிய நாடு ஆல் பேனியா. இதன் பரப்பு 11,000 சதுர மைல். மக்கள் தொகை சுமார் 16,00,000. இந்நாட்டிற்கு வடக்கிலும் கிழக்கிலும் யூகோஸ்லாவியா நாடு உள் ளது; தெற்கில் கிரீஸ் நாடு; மேற்கில் ஏட்ரியாடிக் கடல் உள்ளது. ஆல்பேனியாவின் பெரும்பகுதி மலை களும், பாறைகளும் நிறைந்தது. உயர்ந்த மலைச் சிகரங்கள் பல இங்கு உள்ளன. இம்மலைகளிலிருந்து தரின், செமனி, விஜேசா முதலிய ஆறுகள் உற்பத்தியா கின்றன. அழகிய ஏரிகள் பல உள்ளன. மலைகளில் மரங்கள் அடர்ந்த காடுகள் உண்டு. இக்காடுகளில் ஓநாய், கரடி, காட் டுப்பன்றி முதலிய விலங்குகள் வாழ்கின் கடலோரப் பகுதி சதுப்பு நில றன. மாகும். இந்நாட்டில் கோடைகாலம் அதிக வெப்பமாகவும், வறட்சியாகவும் இருக்கும். குளிர்காலத்தில் அதிகக் குளிர் இருக்கும்; அதிக மழையும் பெய்யும். சோளம், உருளைக்கிழங்கு, கோதுமை, புகையிலை, பார்லி ஆகியவை முக்கிய விளை பொருள்கள். செம்பு, இரும்புத் தாதுக் களும், உப்பும் எண்ணெயும் கிடைக்கின் றன. தோல், புகையிலை, பாலடை, பழங் கள் முதலியன ஏற்றுமதிப் பொருள்கள். எந்திரங்கள், கார்கள் முதலியன இறக்கு மதி செய்யப்படுகின்றன. மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த ஆல் பேனிய மக்கள் இப்போதுதான் ஓரளவு முன்னேற்றமடைந்து வருகின்றனர். மக் கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். ஏட்ரியாடிக் கடல் யூகோ ஸ் லா வி யா 5 ப கிரீஸ் ஆல்பேனியா பசெம்பு XXXM பருத்தி $400 புகையிலை கோதுமை எண்ணெய் மக்காச் சோளம்