பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

ஆஸ்திரேலியா

68 மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் Boode t சமுத்திரம் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா வட பிரதேசம் கார்ப்பென்டேரி வதாகுட் தென் ஆஸ்திரேலியா பசிபிக் சமுத்திரமும், தெற்கிலும் மேற்கி லும் இந்திய சமுத்திரமும், வடக்கே கிழக்கிந்தியத் தீவுகளும் உள்ளன. ஆஸ்திரேலியாவின் நிலப்பகுதி பல வகையானது. மத்திய ஆஸ்திரேலியா முழுவதும் பாலைவனம். இங்கு மழை மிகவும் குறைவு. வடகிழக்கு ஆஸ்திரேலி யாவில் மலைகளும் பீடபூமிகளும் அதிகம். இங்கு நிறைய மழை பெய்கிறது. காடுகள் செழித்து வளர்கின்றன. யூக்கலிப்டஸ் மரங்கள் இங்கு அதிகம். தென் பகுதி முழுவதிலும் விவசாயம் நடைபெறுகின் றது. இங்கு கோதுமை ஏராளமாகப் பயிராகிறது. கடற்கரையோரப் பகுதி களில் பழத்தோட்டங்கள் மிகுதியாக உள் ளன.மரி, டார்லிங் என்னும் இரு முக்கிய ஆறுகளும், பல சிற்றாறுகளும் ஓடித் தெற் கில் கடலில் கலக்கின்றன. செழிப்பான இப்பகுதியில் தான் மக்கள் நெருங்கி வாழ் கின்றனர். குவீன்ஸ்லாந்து அடிலேடு ஆஸ்திரேலியாவின் முக்கிய விளை பொருள்கள் கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, உருளைக்கிழங்கு, கரும்பு முதலியன. ஆப்பிளும் திராட்சையும் ஏராளமாக உற்பத்தியாகின்றன. நாட் டின் முக்கியத் தொழில் ஆடு வளர்த்தல். ார்லிங் நியூ சவுத் வேல்ஸ் DIA சிட்னி ஆறு விக்டோரியர் ஐ மெல்போன் டாஸ்மேனியா சமுத்திரம் "பிரிஸ்பேன் பசிபிக் இந்நாட்டில் சுமார் 13 கோடி ஆடுகள் உள் ளன. வேறு எந்த நாட்டிலும் இத்தனை ஆடுகள் இல்லை. இங்குள்ள ஆடுகளின் உரோமம் உலகிலேயே மிகவும் சிறந்த தாகும். களில் இந்தக் கண்டத்தில் வாழும் விலங்கு சில மிகவும் விந்தையானவை. உலகில் வேறு எங்கும் இவற்றைக் காண முடியாது. இவை காங்கரு, வாலபி என் பன. இவை பாலூட்டிகள். இவ்விலங்கு களின் வயிற்றின் வெளிப்புறத்தில் பை போன்ற உறுப்பு ஒன்று உண்டு. குட்டிகள் பிறந்தவுடனே, இந்தப் பைக்குள் சென்று தங்கும். அங்கேயே பாலுண்டு வளரும். பிளாட்டிமஸ் என்று மற்றுமொரு விலங்கு உண்டு. இதன் வாய் வாத்தின் அலகு போலவே இருக்கும்: இது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். ஆனால் குட்டிகளுக் குப் பால் கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் நெருப்புக் கோழியைப் போலவே ஒரு பறவை வாழ்கின்றது. இதன் பெயர் ஈமு. இதன் மொத்த உயரம் சுமார் 6 அடி. இதற்கு ஒவ் வாரு காலிலும் மூன்று விரல் களே உள்ளன. இப்பறவை பறக்காது. இது ஆஸ்திரேலியாவின் தேசீயப் பறவை. ஆதியில் இந்த நாட்டில் ஆடு மாடுகளோ,