பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்திரேலியா - இசை

69

PURIERFEA காங்கருவும் அதன் குட்டியும் ஆஸ்திரேலியா-இசை கான்பர்ராவிலுள்ள ஆஸ்திரேலிய அரசாங்கக் கட்டடங்கள் முயல்களோ இல்லை. ஐரோப்பியர்கள்தாம் இவற்றை இங்கு முதன் முதல் கொண்டு வந்தனர். இன்று முயல்கள் மிக அதிகமாக உள்ளன. பயிர்களையே அழிக்கும் அளவுக்கு இவை பெருகியிருக்கின்றன. நாட்டில் பலவிதமான எந்திரத் தொழிற்சாலைகள் உள்ளன. தங்கம், செம்பு, வெள்ளீயம், காரீயம், இரும்பு முதலிய தாதுப்பொருள்களும், நிலக்கரியும் அதிக அளவில் கிடைக்கின்றன. ஆட்டு ரோமம், இறைச்சி, தோல், கோதுமை, பார்லி, பழங்கள் ஆகியவை இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்கள். நூல், தேயிலை, பெட்ரோலியம், இரும்புச் சாமான்கள் முதலியவை இறக்குமதி யாகின்றன. ஆஸ்திரேலியாவில் ஆறு மாநிலங்கள் உண்டு. இவற்றுக்குப் பொதுவாக மத்திய அரசாங்கம் ஒன்று இருக்கிறது. தலை நகரம் கான்பர்ரா. மற்ற முக்கிய நகரங் கள்: சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலேடு,பெர்த் ஆகியவை. ஆஸ்திரேலியாவில் பரம்பரையாக வாழ்ந்து வந்தவர்கள் ஆதிக்குடிகளாவர். இவர்கள் தொகை இன்று' மிகவும் குறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாக் கண் டத்தை ஐரோப்பியர் 17ஆம் நூற்றாண் டில்தான் கண்டு பிடித்தனர். இப்போது ஆஸ்திரேலியா முழுவதும் ஐரோப்பியர் களே குடியேறியுள்ளனர். மக்கள் பேசும் மொழி ஆங்கிலம். மதம் கிறிஸ்தவம். ஆஸ்திரேலியாவின் பரப்பு 29,71,081 மைல் ; மக்கள் தொகை 1,03,98,170. இக்கண்டம் பரப்பில் இந் தியாவைவிட 21 மடங்கு பெரியது. ஆனால் இதன் மக்கள் தொகை இந்தியாவின் மக்கள் தொகையில் 40-ல் ஒரு பங்குதான் உள்ளது. சதுர உலகிலேயே மிகச் சிறிய கண்டம் ஆஸ்திரேலியா. உலகின் மிகப் பெரிய தீவும் ஆஸ்திரேலியாதான். 69 உலகிலேயே மிகச் சிறந்த வகை ஆட்டு ரோமம் ஆஸ்திரேலியாவில் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 13 கோடி ஆடுகள் உள்ளன. இசை: அழகான பல ஓவியங்களை யும் சிற்பங்களையும் கண்டு நாம் மகிழ் கிறோம். நல்ல நாட்டியத்தைப் பார்த்து மகிழ்கிறோம். இனிமையான பாடல்களைக் கேட்டு மகிழ்கிறோம். நாம் போற்றும் இந்த அழகுக் கலைகளில் (த.க.) இசை சிறப்பானது. நம்மை மட்டுமின்றி எல்லா உயிரினங்களையும் கவரும் சக்தி இசைக்கு உண்டு. தாய் தாலாட்டுப் பாடினால் குழந்தை அழுகையை நிறுத்திவிடுகிறது. விளையாடும் பொழுதும் சிறுவர்கள் பாடிக்கொண்டே விளையாடுகிறார்கள். உழவர்கள் கூட வயலில் பாட்டுப் பாடிக் கொண்டே வேலை செய்து உழைப்பின் களைப்பை மறக்கிறார். கள். துன்பம் நேரும்போது உள்ளத்திற்கு இசைதான் ஆறுதல் தருகிறது. இன்பத்தி லும் துன்பத்திலும் உள்ளத்தின் உணர்ச்சி களை வெளிப்படுத்தும் ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. பழங்காலத்தில் மக்கள் இயற்கையில் எழும் இனிய ஒலிகளைக் கேட்டு மகிழ்ந்