பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இசைக் கருவிகள்

70

தனர். குயில் கூவுவதும், அருவி நீர் சல சலப்பதும் செவிக்கு மிகவும் இனிமையாக இருந்தது. பின்னர் மக்கள் தாங்களே குரல் எழுப்பி இசையைத் தோற்றுவித் தனர். இசையைத் தோற்று விக்கப் பலவிதமான இசைக் கருவிகளையும் (த.க.) செய்துகொண்டனர். நாளடைவில் மிகவும் தமிழ்நாட்டு இசைக்கலை பழைமை வாய்ந்தது. பழங்காலத் தமிழ் மக்கள் ச, ரி, க, ம, ப, த, நி எனும் ஏழு சுரங்களையும் அறிந்திருந்தனர். இந்த சுரங் கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்களால் அப்போது வழங்கப்பட்டு வந்தன. இசையிலே வல்லவர்களான தமிழ்நாட்டில் பலர் இருந்தார்கள். அவர் களுடைய இசையைக் கேட்டு அரசர்களும் மற்றவர்களும் அவர்களுக்குப் பரிசு வழங் கினார்கள். பாணர்கள் இந்தியாவில் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரே வகையான இசைதான் இருந்து வந்தது. பின்னர் கருநாடக இசை (த.க.) என்றும், இந்துஸ்தானி இசை (த.க.) என் றும் இருவகையாகப் பிரிந்தது. கருநாடக இசை தென் இந்தியாவிலும், இந்துஸ் தானி இசை வட இந்தியாவிலும் சிறப் புற்று விளங்குகின்றன. ஐரோப்பிய இசை இந்திய இசையினின் றும் மாறுபட்டது. இந்திய இசையில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இராகம், ஐரோப்பிய இசையில் இல்லை. ஐரோப்பிய இசையின் வளர்ச்சிக்கு இந்திய இசை பெரிதும் துணை செய்திருக்கிறது. உலகில் இடத்துக்கு இடம் இசை வகை கள் வேறுபட்டுள்ளன. எனினும் பொது வாக இசை மனக்கவலையை மறக்கச் செய்கிறது. எவ்வுயிர்க்கும் அது இன்பம் அளிக்கிறது. இசைக் கருவிகள் : திருமணங் களிலும், கோயில்களிலும், இசை அரங்கு களிலும் பலவகையான இசைக்கருவிகளைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கருவிகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. பொது வாக இசைக் கருவிகளில் நான்கு வகை யுண்டு. நரம்புக் கருவிகள், தொளைக்கருவி கள், தோல் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்பன அவை. மீட்டுங் கருவிகள், வில் கருவிகள், தட் டுங் கருவிகள் என நரம்புக் கருவிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மீட்டுங் கருவிகளிலுள்ள நரம்புகளை விரல்களினா லோ, தந்தம் அல்லது உலோகத் தகட்டினாலோ, அல்லது மரக் குச்சியினா லோ மீட்டி இசையெழுப்புகின்றனர். வீணையும், சித்தாரும் இவ்வகையைச் சேர்ந் தவை. சாரங்கியும், வயலினும் வில் கருவி கள். இவற்றின் நரம்புகளை ஒரு வில்லைக் கொண்டு இசையெழுப்ப வேண்டும். தட் டுங் கருவிகளில் நரம்புகளைக் குச்சிகளைக் கொண்டோ,சிறு சுத்திகளைக் கொண்டோ மெல்லத் தட்டி இசையெழுப்புவர். சுர மண்டலமும், பியானோவும் இவ்வகையின. பியானோவிலுள்ள கட்டைகளை அழுத் தினால், அந்தக் கட்டைகளுக்குரிய சிறு சுத்திகள் பியானோவின் நரம்புகளைத் தட்டு கின்றன. தொளைக் கருவிகளில் இருவகையுண்டு. ஆர்மோனியம் போன்றவை ஒருவகை. இவற்றுள் பொருத்தப்பட்டுள்ள துருத்தி யினால் காற்றை உள்செலுத்தினால் இசை பிறக்கும். புல்லாங்குழல், கிளாரினெட் போன்றவை நாகசுரம், மற்றொரு இவற்றில் வாயை வைத்து வகை. ஊதினால் இசை பிறக்கும். தோல் கருவிகள் பல உருவங்களில் செய்யப்படுகின்றன. முரசங்களும் பேரி கைகளும் போர்ப்படைகளுக்குப் பயன்படு கின்றன. நகரா, டமாரம் போன்றவை கோயில்களில் முழக்கப்படுகின்றன. இசை யரங்குகளில் மிருதங்கம் வாசிக்கிறார்கள். கஞ்சிராவும் வாசிப்பதுண்டு. வட இந்திய இசைக்குத் தபலா என்ற தோல் கருவி யைப் பயன்படுத்துகின்றனர். நாகசுரம் வாசிக்கும்பொழுது அளவைக் கணக்கிடுவதற்கு வெண்கலத் தாலான தாளங்களைத் தட்டுவார்கள். இந்தத் தாளங்கள் கஞ்சக் கருவிகளைச் சார்ந்தவை. வெண்கலத்துக்குக் கஞ்சம் என்றும் ஒரு பெயருண்டு. முக்கியமான இசைக் கருவிகளுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. கால பண்டையத் தமிழ் நாட்டில் அமைக்கப்பட்ட இசைக் கருவிகளுள் யாழ் என்னும் நரம்புக் கருவி மிகவும் சிறந்து விளங்கியது. இதில் பலவகை உண்டு. 8996 |,90RUR= சகோட யாழ்