பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய மொழிகள்

81

இந்திய மொழிகள்: நீங்கள் பேசு வது தமிழ் மொழி அல்லவா? தமிழ் நாட் டில் பெரும்பாலான மக்கள் தமிழ்தான் பேசுகின்றனர். கேரள மாநில மக்கள் மலையாளம் பேசுகின்றார்கள். ஆந்திரத் தில் தெலுங்கும், மைசூர் மாநிலத் தில் கன்னடமும் பேசுகின்றார்கள். மைசூர் மாநிலத்தில், தென் கன்னட மாவட்டத்தின் ஒரு பகுதியில் துளு என்ற மொழியைப் பேசுகின்றார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகளுக்குள் காணப்படு ஒரு மொழியிலுள்ள பல சொற் கள் மற்ற எல்லா மொழிகளிலும் காணப் படுகின்றன. இம்மொழிகள் எல்லாம் ஒரு தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை எனக் கொள்ளுகின்றோம். இக்குடும்பத் துக்குத் திராவிட மொழிக் குடும்பம் என்று பெயர். ஆகிய இந்த ஐந்து நெருங்கிய ஓர் உறவு கிறது. வட இந்தியாவில் பேசும் பல மொழி களுக்குள்ளும் சில ஒற்றுமைகள் காணப் படுகின்றன. ஏனெனில் அவை யாவும் ஒரு தனி மொழிக் குடும்பத்தைச் சேர்ந் தவையே. அக்குடும்பத்துக்கு இந்தோ- ஆரிய மொழிக் குடும்பம் என்று பெயர். சமஸ்கிருதம், சிந்தி, பஞ்சாபி, மராத்தி, இந்தி, வங்காளி, ஆசாமிய மொழி இவை இந்திய மொழிகளில் பெருவாரியாக வழங்கும் 15 மொழிகள் மட்டும் இந்திய அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெற்றுள்ளன. இம் மொழிகளையும், 1961ஆம் ஆண்டில் எடுத்த கணக்கின்படி அவற்றைப் பேசுவோரின் எண்ணிக்கையையும் கீழே காணலாம். பேசுவோர் தொகை மொழி ஆசாமிய மொழி இந்தி உருது ஒரியா கன்னடம் காச்மீரி குஜராத்தி சமஸ்கிருதம் இந்திய மொழிகள் சிந்தி தமிழ் தெலுங்கு பஞ்சாபி மராத்தி மலையாளம் வங்காளி 68,03,465 13,34,35,360 2,33,23,518 1,57,19,398 1,74, 15,827 19,56,115 2,03, 04,464 2,544 13:71,932 3,05,62,706 3,76,68,132 1,09,50,826 3,32,86,771 1,70,15,782 3,38,88,939 81 யாவும் இக்குடும்பத்தைச் சார்ந்த மொழி கள். சமஸ்கிருத மொழி இப்போது பேச்சு வழக்கில் இல்லை. இலக்கியத்திலும் நாட கங்களிலும் சில சமய ஆராய்ச்சிகளிலும் மட்டும் இது வழங்கி வருகின்றது. ஆனால் சமஸ்கிருதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல மொழிகள் இந்தியாவில் இன்று பலரால் பேசப்படுகின்றன. திராவிட, இந்தோ-ஆரிய மொழிக் குடும் பங்களிலிருந்து நூற்றுக்கணக்கான கிளை மொழிகளும் தோன்றியுள்ளன. 1961-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி இந்தியாவில் பேசும் மொத்த மொழிகள் 1,652. இவற் றுள் பெரும்பாலானவை இந்தியாவின் மலைப்பகுதிகளிலும் காடுகளிலும் வாழும் ஆதிக்குடிகளால் (த.க.) பேசப்படுகின் றன. இந்திய மொழிகளில் பெருவாரியாக வழங்கும் 15 மொழிகள் மட்டும் இந்திய அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெற் றுள்ளன. இந்திய மொழிகள் பலவற்றுள் சிறந்த நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இராமாயண மும், மகாபாரதமும் பல மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. சங்கரதேவர், மகா தேவர் என்ற கவிஞர்கள் ஆசாமிய மொழி பல நாடகங்களையும், கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்கள். பட்டதேவர் யில் யும் என்பவர் பாகவதத்தையும், பகவத்கீதை யையும் ஆசாமிய மொழியில் எழுதியிருக் கின்றார். இந்தி மொழியானது இந்தியாவின் ஆட்சி மொழியாக அரசியல் அமைப்பில் இடம் பெற்றுள்ளது. வட இந்தியாவில் பேசும் பல மொழிகள் இந்தியுடன் நெருங் கிய தொடர்புடையவை. அவற்றையெல் லாம் இந்தியுடன் சேர்த்தே கணக்கிடுகின் றனர். துளசிதாசர் இராமாயணமும், மீராபாய் பாடல்களும் இம்மொழிக்குப் பெருஞ்சிறப்பை அளிக்கின்றன. வங்காளி மொழி நல்ல வளர்ச்சி பெற் றுள்ளது. சண்டீதாஸ் என்பவர் இனிய கண்ணன் இராதை பாட்டுகள் எழுதியிருக் கின்றார். மைக்கேல் மதுசூதன தத்தர், பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆகியவர்கள் புதிய இலக்கியங்களைப் படைத்தார்கள். சுவாமி விவேகாநந்தர், சரத் சந்திரர், ரவீந்திரநாத டாகுர் ஆகியவர்கள் வங் காளி மொழியின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டார்கள். டாகுரின் கீதாஞ் சலி என்ற பாடலின் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு 1913-ல் நோபெல் பரிசு கிடைத்தது. ஒரியா மொழியில் அர்ச்சுனதாசர் தீன கிருஷ்ணர், பக்கீர் மோகன் சேனாபதி ஆகியவர்கள் சிறந்த நூல்கள் எழுதி மொழியை வளர்த்தனர்.