பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

( 88 இந்தியா கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிர பருணி ஆகிய ஆற்றுச் சமவெளிகளிலும், கேரளக் கடற்கரைப் பகுதிகளிலும் நெல் ஏராளமாக விளைகிறது. கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்களும் புன்செய் நிலங்களில் பயிராகின்றன. வேர்க்கடலை தென்னிந்தியாவில் அதிகம் பயிரிடப்படு கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் புகையிலை பயிராகிறது. இந்தியா முழுவதிலும் கரும்புச் சாகுபடி அதிகமாக நடைபெறு கிறது. மகா ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங் களில் பருத்தி விளைகிறது. வங்காளம், பீகார், ஆசாம் ஆகிய மாநிலங்களில் சணல் ஏராளமாகப் பயிராகிறது. சண லைக் கொண்டுதான் கோணிப் பைகளை யும், கித்தான்களையும் நெய்கிறார்கள். தொழில்வளம்: சுதந்தரம் பெற்ற பின்னர் தொழில்துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தி யாவில் பஞ்சாலைத் தொழில் மிக முக்கிய மானதாகும். அகமதாபாத், ஷோலாப் பூர், பம்பாய், நாகபுரி, கோயம்புத்தூர், சென்னை, மதுரை முதலிய இடங்களில் பல பஞ்சாலைகள் உள்ளன. கல்கத்தாவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏராளமான சணல் ஆலைகள் உள்ளன. நிலக்கரிச் PEENTELISTY இந்துஸ்தான் எஃகு ஆலை இது ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள ரூர்க்கேலா என்னுமிடத்தில் உள்ளது. ஜெர்மனியின் உதவி யுடன் இத் தொழிற் சாலை இயங்கி வருகிறது. சுரங்கங்கள் மிகுதியாக உள்ள பீகார் மாநிலத்தில் இரும்பு-எஃகுத் தொழிற் சாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி தோண்டி எடுக்கப்படுகிறது. பிலாய் (மத்தியப்பிரதேசம்), ரூர்க்கேலா (ஒரிஸ்ஸா), துர்க்காப்பூர் (மேற்கு வங்காளம் ) ஆகிய மூன்று இடங்களிலும் மிகப் பெரிய இரும்பு-எஃகு ஆலைகளை இந்திய அரசாங்கம் அந்நிய நாட்டு உதவி யுடன் நிறுவியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கப்பல் கட்டும் தொழில் நடைபெற்று வருகிறது. சென்னை யில் ரெயில்பெட்டித் தொழிற்சாலையும், மேற்கு வங்காளத்தில் சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையும் உள்ளன. பெங்களூரில் விமானங்கள் கட்டும் தொழில் நடைபெறுகிறது. டெலிபோன் கருவிகள், கைக் கடிகாரங்கள், சிறு எந்திரக் கருவிகள் ஆகியவையும் இங்குத் தயாரிக்கப் படுகின்றன. பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் மோட்டார் வண்டிகள் செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவில் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களிலும் இந்தியாவில் பல இடங்களிலும் சைக்கிள் தொழிற்சாலைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவை தவிர நாடெங்கும் சிமென்டு, காகிதம், தோல், ரப்பர், சோப்பு, கண்ணாடி, தீப்பெட்டி, ரசாயன உரங்கள், சர்க்கரை, மின்சார சாதனங்கள் போன்ற பொருள்கள் தயாரிக்கும் பல தொழிற் சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. வட உள்ளன. நூல் நூற்றல், கைத்தறி நெசவு, கயிறு திரித்தல், கூடை முடைதல், பாய் பின்னு தல், மண்பாண்டங்கள் செய்தல், பொம்மைகள் செய்தல் போன்ற எண் ணற்ற பல கைத்தொழில்களும் குடிசைத் தொழில்களும் இந்தியா முழுவதும் நடை பெற்று வருகின்றன. மண்பாண்டம் வனைதல் இந்தியாவின் குடிசைத் தொழில்களில் ஒன்று.