பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா ாது தாதுவளம்: இந்தியாவில் பல விதமான தாதுப் பொருள்கள் கிடைக் கின்றன. இவற்றுள் இரும்பு, நிலக்கரி, அப்பிரகம், மாங்கனீஸ், அலுமினியம், தங்கம், பெட்ரோலியம், சுண்ணாம்புக்கல் ஆகியவை முக்கியமானவை. இரும்புத் தாது பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகுதி யாகக் கிடைக்கிறது. தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில் இரும்புத்தா இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆசாம், வங்காளம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. தமிழகத்தில் நெய் வேலியில் பழுப்பு நிலக்கரி தோண்டி எடுக் கப்படுகிறது. மாங்கனீஸ், அப்பிரகம் இரண்டும் இந்தியாவிலிருந்து பல நாடு களுக்கு ஏற்றுமதியாகின்றன. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் மாங்கனீஸ் கிடைக்கிறது. தமிழ்நாடு, பீகார், ராஜஸ் தான், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் அப்பிரகம் மிகுதியாக எடுக்கப்படு கிறது. பாக்சைட் என்னும் அலுமினியத் தாது மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்திலும் கிடைக்கிறது. மைசூர் மாநிலத்திலுள்ள கோலாரில் தங் கம் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆசாமி லும், குஜராத்திலும் பெட்ரோலியம் கிடைக்கிறது. உயிரினங்கள்: இந்திய யானை களும், புலிகளும், காண்டாமிருகங்களும் உலகப் புகழ் பெற்றவை. பெரிய காடுகள் எல்லாவற்றிலும் புலிகள் வாழ்கின்றன. உத்தரப் பிரதேசம், வங்காளம், ஆசாம், மைசூர், கேரளம், தமிழ்நாடு இம்மாநிலங் களிலுள்ள மலைகளிலும், காடுகளிலும் இவற்றைக் காணலாம். சிறுத்தை, கரடி, யானை ஆகியவையும் இக்காடுகளில் உண்டு. ஆசாமில் ஒற்றைக்கொம்பு காண்டா மிருகங்கள் வசிக்கின்றன. குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் சிங்கங்கள் காணப் படுகின்றன. பலவகை மான்கள், காட் டெருமைகள், காட்டுப்பன்றிகள், குரங் கினங்கள் இவை எல்லாக் காடுகளிலும் வாழ்கின்றன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான பறவை இனங்கள் உண்டு. மிக அழகான தோற்றம் கொண்ட பல பறவைகள் நாடெங் கும் காணப்படுகின்றன. பல வண்ணக் கிளிகளும், மயில்களும் இந்தியாவில் உள் ளன. மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. இந்திய ஆறுகளிலும், இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்களிலும் பலவகையான மீன்கள் வாழ்கின்றன. இக்கடல்களில் மிகப் பெரிய சுறா மீன்களையும், சிலவகைத் திமிங்கிலங்களையும் காணலாம். 89 வன விலங்கினங்களும், பறவை இனங் களும் காலப்போக்கில் முற்றிலும் அழிந்து மறைந்து போகாமல் இருக்க நாட்டில் ஆங்காங்குப் பல புகலிடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள முது மலை வனவிலங்குப் புகலிடமும், வேடந் தாங்கல் பறவைகள் புகலிடமும் சிறப் வட இந்தியாவில் கார்பெட் தேசீயப் பூங்கா, கசிரங்காப் புகலிடம், காட்டுப் புகலிடம் ஆகியவையும், மைசூரில் பண்டிப்பூர் புகலிடமும், கேர ளத்தில் பெரியாற்றுப் புகலிடமும் உலகப் புகழ்பெற்ற வேறு சில வனவிலங்குப் புகலி டங்கள் ஆகும். பானவை. கிர் போக்குவரத்து: இந்தியாவில் நாடு முழுவதும் ரெயில் பாதைகளும் நெடுஞ் சாலைகளும் பல மைல் நீளத்திற்குப் போடப்பட்டுள்ளன. ரெயில் பாதைகளின் நீளத்தைப் பொறுத்தவரையில் இந்தியா ஆசியாவிலேயே முதன்மையான நாடாக வும், உலகத்தில் நான்காவதாகவும் விளங்குகிறது. பெரிய நகரங்களான டெல்லி, பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகியவை உலகிலுள்ள வேறு பல பெரிய நகரங்களுடன் விமானப் போக்குவரத் இணைக்கப்பட்டுள்ளன. உள் நாட்டு விமானப் போக்குவரத்தும் உண்டு. கல்கத்தா, பம்பாய், சென்னை, கொச்சி ஆகிய துறைமுகங்கள் வாயிலாக உலக நாடுகள் பலவற்றுடன் கப்பல் போக்கு வரத்தும் நடைபெற்று வருகிறது. தால் காச்மீரத்தின் ஒரு பகுதியான லடாக்கில் வாழும் ஒரு பெண். பலவகை அணிகளையும், அழகிய சித் திர வேலைப்பாடுகள் நிறைந்த சால்வையையும் இவள் அணிந்திருக்கிறாள். காச்மீர சால்வைகள் உலகப் புகழ்பெற்றவை.