பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இந்தியா இந்தியாவில் உள்ள முக்கியமான புண்ணியத் தலங்களுள் காசி ஒன்றாகும். காசிக்குச் கங்கை ஆற்றில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். சென்று தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள கபாலீசுவரர் கோயில். வானளாவிய கோபுரங்கள் கொண்ட இத்தகைய இந்துக் கோயில்களைத் தமிழ் நாடெங்கும் காணலாம். நாகரிகம்: இந்திய நாகரிகம் மிகவும் பழமையானது. நாகரிகத்தில் உயர்ந்த மக்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந் நாட்டில் வாழ்ந்து வந்தனர். மொகஞ்ச தாரோ, ஹரப்பா என்ற இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில்கண்ட உண்மை இது. அவர்கள் திராவிட மக்கள் என ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். அகன்ற நகரங் கள், மாடி வீடுகள், கிணறுகள், குளிப்ப தற்கான குளங்கள், இவற்றையெல்லாம் அவர்கள் அமைத் திருந்தார்கள். பிறகு வளர்ந்த ஆரிய நாக ரிகம் நாடு முழுவதும் பரவிப் பண்டைய நாகரிகங்களுடன் கலந்துவிட்டது. பழங் காலத்தில் ஆற்றுச்சமவெளிகளில் தோன்றி வளர்ந்த நாகரிகங்களும், பண் பாடுகளும் நாட்டில் இன்றும் அழியாமல் விளங்கி வருகின்றன. வாய்க்கால்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜயப்பூரில் உள்ள 'ஹவா மகால்' math சாஞ்சி - தூபி மத்தியப் பிரதேசத்தில் சாஞ்சி என்னுமிடத்தில் உள்ள இந்தத் தூபி பௌத்தக் கலையின் ஒப்பற்ற சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. FUL CC Ca குதுப் மினார் இது டெல்லியிலுள்ளது. இஸ் லாமியக் கட்டடக் கலைக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டாக விளங்குகிறது.